கட்டுப்பட்டால் 19° முன் வாங்கிய பானு, பின்வாங்கினாள். அண்ணிக்கு இப்படிப்பட்ட ஒரு நெகட்டிவ் கிருப்தியா... எப்படியோ எந்த முறையிலேயோ, அண்ணனை சம்மதிக்க வச்சால் போதும். எனக்கு வேண்டியது சொத்துச் செல்வம் இல்லை. என் செல்வந்தான்... என்னுடைய செல்வந்தான். பானு திரும்பி வந்தபோது, அப்பாவும் அவரும்" சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் செல்வத்திற்கு எதிரே உட்காரப் போனாள். பிறகு நாணப் பட்டு அப்பாவின் நாற்காலிக்குப் பின்புறமாய் நின்று கொண்டாள். இதற்குள் பாஸ்கரனும், மைதிலியும் சிரித்த படியே வந்தார்கள். மைதிவி உட்காரும் முன்பே சரி நல்ல நாளாய் பாருங்க’’ என்று சொல்லிவிட்டு, கணவன் எதுவும் குறுக்கே பேசிவிடக்கூடாது என்று அவனைக் கண்டிப்போடு பார்த்தாள். தணிகாசலம் நாற்காலியைத் தூக்கி செல்வத்திற்கு எதிரே போட்டுக்கொண்டு உட்கார்கிறார். வருங்கால மாப்பிள்ளையை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். இருபத்தாறு வயதில் ஞானி போன்ற முகம். ஆனாலும் பிஞ்சில் பழுக்காத நிர்மலமான முகம்; நீண்ட விரல்கள்: எல்லாவற்றையும் விலகியிருந்து பார்ப்பது போன்ற சலன மற்ற பார்வை; எதையும், எவரையும் பெரிதாகவோ சிறி தாகவோ எடுத்துக்கொள்ளாதது போன்ற தோரணை, இந்த பாஸ்கரனும் இருக்கானே... பகலில் ரேஸ். நைட்டில் மசாஜ் பார்லர். இவன்மட்டும் எனக்கு மகனாகப் பிறந்திருந் தால் எனக்கு இப்படிப்பட்ட பிரஷ்ஷரே பிறந்திருக்காது." தணிகாசலம் குரலை கனைத்துக்கொண்டார். ஏற்ற இரக்கமற்ற குரலில் பேசினார். ஒன்னை எங்களுக்கு பிடிச்சிருக்கு தம்பி. பானு கொடுத்து வைத்தவள். ஒன்னை மாதிரி குணமுள்ள பைய னுக்குத்தான் நானும் காத்திருந்தேன். ஒன்னோட வீட்டு
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/29
Appearance