பகுதி) சக்தி பந்தம் 551
ளாகிய மாதர்களின் விசாலமான கண்களும், தண்மை, மலர் வில்லிதன் போரான் நமக்கு தயை அளித்த - குளிர்ந்த காம காண்டமென்னும் மலரையே வில்லாகக்கொண்ட மன்மதன் செய்த போரினிடத்து நமக்கு அருள் புரிந்த, கண் மலர் காவிக்கு எதிராவன அன்று. கண்களாகிய நீலோற்பல மலர்களுக்குச் சமானமாவனவல்ல ; கை பொலிந்த பண் மலர் யாழ் பயில்வார் ஆர்வு சேர் பதி நாகை - கையிடத்து விளங்கும் இன்னிசையைத் தரும் யாழினைப் பயிலும் அப்பெண்ணின் உறைவிடம் பொருந்திய நகரம் நாகபட்டினமாம் (எ - று.)
தடங்ங்கண்கள் - ஒற்றளபெடை.
போரான் - போரில் ; வேற்றுமை மயக்கம். மலர் வில்லி - மன்மதன், மன்மதனுக்குக் கரும்பு வில்லோடு காம காண்டம் என்னும் மலரும் வில்லாம் ; புஷ்பதந்வா என்ற பெயரும் இதனை வலியுறுத்தும். ஒப் : நீறுபடு துட்டமதன் வேறுரு வெடுத்தலரி னீள்சிலை குனித்து" (மதுரைக் கலம்பகம்). ஆர்வு, ஆர்வம்' என்பதன் விகாரமெனினுமாம் ; ஆர்வம் - அன்பு. இது பாங்கற்குத் தலைவன் தலைவியின் இயலிடங் கூறியது.
இச்செய்யுள், ஆறாரைச் சக்கிரத்திலமையும்போது, நடுவே ரா என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஒன்பதொன்பது எழுத் தாய்க் குறட்டின்மேற் 'போதி வானவர்' என்னும் பெயர் தோன் றச் சுற்று வட்டத்தில் இருபத்து நான்கு எழுத்து நின்று முற் றுப் பெற்றது. -
இனி, எட்டாரைச் சக்கிரத்திற்கு உதாரணம்:
மலர்மலி சோலை யகனலங் கதிர்க்க மடமயி லியற்றக மாதிரம் புதைத்து வளைந்துபுகன் மேக வல்லிருண் மூழ்க வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி மன்னுமா மடமொழி வடிவாள் வளவன், கன்னித் துறைவன் கனகச் சிலம்பே:
(உ௧) இச்செய்யுள், பாங்கற்குத் தலைவன் தலைவியது இயலிடிங், கூறல் என்னுந் துறைத்தாம்.
இதன் பொருள் :- மா மடமொழி - பெருமை வாய்ந்த மடப்பத்தை உடைய மொழியினையுடையாள், மலர் மலி சோலை - பூக்கள் நிறைந்த சோலையின், அகல் நலம் கதிர்க்க - மிகுந்த