உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திர கவி விளக்கம்

        முகவுரை

சென்னைப் பல்கலைக் கழகத்தார் 189 ஒ. பி. ஏ. வகுப்பிற்குக் தமிழ்ப் பாட புத்தகங்களுள் ஒன்றாகத் தண்டி அலங்காரம் சொல்லணியியல் வைத்திருந்தனர். அக்காலத்தில், சுத்தமான பாடத்தோடு கூடிய தண்டி யலங்காரப் பிரதி கிடைப்பதரிதாயிருந்தது. சித்திர கவிகளைச் சித்திரங்களில் அமைத்து நோக்குதற்குச் சித்திர உருவங்கள் இன்னவாறு தீட்டப் பட வேண்டுமென்றும், எழுத்துக்களை இன்னவாறு அமைக்கவேண்டுமென்றும் செவ்வனே புலப்படாமையினால் மாணாக்கர்கள் . பெரிதும் இடர்ப் பட்டமை கண்டு, ஆசிரியர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள், சித்திர கவிகளின் இயல்பு நன்கு புலப்படச் சித்திர் கவி விளக்கம் என்னும் சிறு புத்தகமொன்றைத் தமது மாணாக்கர்களின் உபயோகத்திற்கென்றே அச்சிட்டு உபகரித்தனர். பின்னர், ஆசிரியர் தமிழ் பயின்ற இயற்றமிழ் மாணவர் தண்டியலங்காரம் பாடங்கேட்ட காலத்துக் தண்டியலங்கார சித்திர கவிகளையும் மற்றும் வடமொழி அணியிலக்கணங்களிற் கண்டு புதியனவாகப் புனைந்த சில சித்திர கவிகளையும் ஒருங்கு சேர்த்துச் - சித்திரமமைத்துதவினர். ஆசிரியர் தாமே தண்டி அலங்காரத்தைச் சுருக்கமாக அச்சிட்டுத் தமிழ் உலகிற்கு உபகரிக்கக் கருதியிருந்ததுண்டு. அஃது நிறைவேறாமையின், தமிழ் அணி நூல்களைக் கற்கும் மாணாக்கர்கட்குப் - பயன்படல் கூடுமெனக் கருதி இச்சித்திர கவி விளக்கத்தை உதாரணச் செய்யுட்களுக்கு உரையும் வரைந்து சேர்த்து வெளிப்படுத்தத் துணிந்தும். ஆசிரியர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்த எச்செயலையும் வீணாக விடக்கூடாதென்ற நன்ளனோக்கத்தையே கடைப்பிடித்து ஒழுகும். அன்னோர்தம் குமாரராகிய ஸ்ரீ வி. கு. சுவாமிநாதன் அவர்கள் செய்து வரும். நன்முயற்சித் தமிழ் உலகம் பாராட்டியருள அதனைப் பெரிதும் வணக்கத்தோடு வேண் டிக்கொள்கின்றேம். - - - -

கோயம்புத்தூர், }

8–2–1939.

              ந. பலராம ஐயர்