பகுதி) சதுரங்க துரக கதி பந்தம் 575
போன்ற சூரிய நாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச் சியிற்கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலின், நெஞ்சமே ! நீ பல விஷயங்களிலும் போய்ப் பயனின்றித் திரி வதை விட்டு எம்மோடு கூட வணங்க வருவாய், என்று நெஞ்சை விளித்துக் கூறியதாம் இச்செய்யுள். என் கொல் ஓ - கொல் ஓ இரண்டும் அசை. 'தமிழ் நயந்து' என்பது 'தமிணயந்து" என்றாயது, வீர சோழியம் சந்திப்படலத்து "ஐம்மூன்றதாம்" என்ற கட்டளைக் கலித்துறையில், "மெய்ம்மாண்ப தாநவ் வரின் முன் னழிந்து பின் மிக்கண வ்வாம்" என்ற விதியானமைந்தது ; அன்றி, மரூஉ மொழியுமாம். பூவர் - மொழியிறுதிப்போலி.
இச்செய்யுளைச் சதுரங்க துரக கதி பந்தத்தில் அமைத்து நோக்குங்கால் இடப்புறங் கீழிருந்து வலப்புறம் மேனோக்கிச் செல் லும் கோணாந்தரத்தில் ஆசிரியர்தம் இயற்பெயராகிய சூ ரிய நாராயணன்' என்னும் நாமம் பொருந்துவதை உற்று நோக்குக. செய்யுளில் 'பரிதிமால்' என்னும் புனைவுப் பெயரும், சித்திரத்தில் 'சூரிய நாராயணன்' என்னும் இயற்பெயரும் அமைந்துள்ளன.
இனி இரதபந்தம், கடக பந்தம், பதும பந்தம் முதலியவற் றின் இலக்கணங்களையும் அவற்றிற்கு உதாரணங்களையும் மாற னலங்காரத்திலும் வில்வதளபந்தம் முதலியவற்றை வடமொழியலங் கார சாத்திரங்களிலும் காண்க. காஞ்சிப் புராணம் சுரகரீசப் படலத்திலும், திருநாகைக்காரோணப் புராணம் நந்திநாதப் படலத்திலும், திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் அருமையாய் அமைந்துள்ள சித்திர கவிகள் தமிழணி நலங்கற்க விரும்புநர் பார்த்து இன்புறற்பாலன.