உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*28 சி வ ஞ | ண ம்

அவனது கனிந்த மனமும், இனித்த மொழியும் என்னை இன்புறச் செய்தன. என் தேகமும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பொலிவுற்று விளங்கியது. நான், கண்டோர் வியக் கும் கட்ட ழகு வாய்ந்து, கவலை யற்றுக் களிப்புற் றிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பன்னி ரண்டாம் வயது பூர்த்தி யடைந்தது. குட்டி-இன்பமுடன்) ஆ ! ஆனந்தம் - ஆனந்தம், அன்புள்ள எச மானருக் கேற்ற அருமை வேலை யாள் ! அவன் வேலையாள் அல்லன் ; நம்மை வாழ்விக்க வந்த வள்ள ல் , நம்மைக் காப்பாற்ற வந்த காவலன் ; நாம் கை கூப்பித் தொழும் கடவுள் :- ஆல்ை அம்மணி, அத்தகைய எழில் பெற்றிருந்த தாங்கள், இப்போது இளைத்து உரு

மாறி நிற்கக் காரணம் என்ன ?

குதிரை-(துயரத்துடன்) ஆ அது என் தலைவிதி. அவ்விதியை வெல்ல எவரால் ஆகும் நான் இன் புற்றிருக்க இறைவனுக்கு எண்ணமில்லை போலும், கண்மணி, என்னைக் கருத்துடன் பாது காத்து வந்த வேலையாள் சில நாட்களுக்கெல்லாம் விண்ணுலகை விழைந்தேகினன். அந்தோ ! அவன் இறந்ததின் பொருட்டு நான் எவ்வாறு துயருற்றேன் என்பதை எல்லாம் வல்ல இறை வனேயன்றிப் பிறர் அறியார். நான் ஏழு நாட்கள் வரையில் உணவு கொள்ளாது ஏக்கமுற்றிருந் தேன் ; அவன் பிரிவை யெண்ணி யெண் ணிப் பன்னெடு நாட்கள் கண்ணிர் விட்டுக் கலங்கி நின் றேன். ஆ அத்துன்பம் என்ைேடு நிற்பினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/35&oldid=563067" இலிருந்து மீள்விக்கப்பட்டது