உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
2

சிவஞானம்


யாலும் பின்னர்ச் சிறந்த செல்வந்தராயினர். ஆதலின், அவர் தம்மிடத்துவரும் சிறுவர்களுக்குப் பல்வகை யானும் நல்லொழுக்கத்தைப் போதித்து வந்தார். அச் சிறுவர்கள் பொருட்டு அன்று அவர் ஏதோ ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதைக் கேட்க வேண்டு மென்னும் விருப்பால் அவர்கள் அம்முதியவரைச் சூழ்ந்திருந்தனர்.

குப்புசாமிப் பிள்ளை, தாம் எழுதி வைத்திருந்த காகிதக் கற்றையைக் கையில் எடுத்தார். சிறுவர்களின் முகம் அப்போது அழகுற்று விளங்கியது. அவர்கள் அம்முதியவரின் முகத்தை மிக்க ஆவலோடு நோக்கிக் கொண்டிருந்தனர்.

" தாத்தா, இன்னும் என்ன தாமதம் ? சீக்கிரம் ஆகட்டும்-ஆகட்டும், ' என்று அவரைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தினர் அச்சிறுவர்களில் சிலர். "அடே, இரைச்சல் இடவேண்டாம். நம் தாத்தா ஒரு கதை எழுதி யிருக்கின்றார் சிறிது நேரம் பேசா திருங்கள் : அப்போதுதான் அவர் அதைப் படிப்பார்," என்று சொல்லி, அவர்கள் பேச்சை அடக்க முயன்றான் வேறோரு சிறுவன்.

சிறுவர்களின் கொண்டாட்டச் செயல்களைக் கண்ட குப்புசாமிப் பிள்ளை புன்முறுவலோடு அவர்களை நோக்கி, ' "பிள்ளைகளே, நான் இதில் எழுதியுள்ளவை யாவும் உண்மையில் நடந்தவைகளே என்பதை என்றும் மறவாதேயுங்கள். உங்களில் ஒருவன் இதனை வாசிப்பான். மற்றவர்கள் கருத்துடன் கவனித்துக் கேளுங்கள். இதில் உங்களுக்கு நேரும் சந்தேகங்களை நான் முடிவில் தெளிவாக விளக்கிக் கூறுகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/9&oldid=1671954" இலிருந்து மீள்விக்கப்பட்டது