2 S அளவிடமுடியாத பெரும் செல்வாக்கு படைத்த வர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர்கள். அவர்கள், அச்செல் வாக்கை மற்ருெரு நல்ல செயலுக்குத் திருப்பிவிட வேண்டும். பாதுகாப்பு நிதிக்குத் தாராளமாக வழங்கும் படி பொதுமக்களே ஊக்குவிக்கவேண்டும். பணத்தை மட்டும் கொடுத்தால் போதுமா? ஒவ்வொரு குடும்பமும் தன் சக்திக்கு ஏற்ற அளவில் தங்கத்தைத் தரவேண்டும். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் இப்பிரசாரத்தை மேற் கொண்டால், விரைவில் ஏராளமான தங்கம் எளிதாகக் குவிந்துவிடும். ஆகவே ஆசிரியத் தோழர்கள் மனம் உவந்து கொடுக்கட்டும், மனமகிழ்ச்சியோடு கொடுக்க வைக்கட்டும். பாதுகாப்பிற்குப் பணம் மட்டுமா தேவை? இன்னும் பல தேவை. வாலிபமும், வன்மையும் உடையவர்கள் இராணுவத்திலே சேரவேண்டும். அவை இல்லாதவர்கள் என்ன செய்வது? இதுதானே உங்கள் கேள்வி: அவை இரண்டும் உடையவர்களைப் பட்டாளத்தில் சேரத்துண்டி ஊக்குவிக்கவேண்டும். போர் நெருக்கடியில் தேவையானது மற்ருென்று. அது எது? அதுவே இரத்த தானம். ஆசிரியர்களும், தம்மால் முடிந்த அளவு இரத்ததானம் செய்ய வேண்டும். பிறரையும் இரத்ததானம் செப்புமாறு தூண்டவேண்டும். மேலும் செய்யவேண்டியது யாது? தீமையிலும் நன்மை விளைவது உண்டு என்பது உங்களுக்கு நன்ருகத் தெரியும். சீன ஆக்கிரமிப்பால், நம் மக்களிடையே நாட்டுப் பற்றும் ஒற்றுமையுணர்ச்சி யும் மேலோங்கியுள்ளன. இவை நன்ருக வேரூன்ற
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/34
Appearance