30 கொல்லிக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கு ஒவ்வொரு நாள் என்று திட்டமிட வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிறவர் களுக்கு அத்திட்டப்படி முறையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதுவே ஆசிரியர் ஆசிரியைகளிடம் எதிர் பார்க்கும் அதிக உழைப்பு. இந்த அதிக உழைப் பின் பலனே? தேர்ச்சி அதிகமாவதே. இதற்காக எப்படியோ மேல் வகுப்பிற்குத் தள்ளிவிடலாமா ? கூடவே கூடாது. தேறுவதற்கு வேண்டிய மதிப்பெண் கள் எல்லோரும் வாங்கும்படி செய்ய வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இவ்வாண்டில் இது முடியுமா என்று மலைக்காதீர்கள். ஆண்டுப் பரீட்சைக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இதற்குள் எவ்வளவோ செய்ய முடியும்? திட்டமிட்டுக் கூடுதலாகக் கற்பிப்ப தன் மூலம் அதிகம் பேரைத் தேற வைக்க முடியும். தேர்ச்சி உயர்வு இவ்வாண்டில் தொடங்கட்டும். மூன்ருண்டுகளில் முழுத்தேர்ச்சி நிலேக்கு உயரட்டும். இது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் ஆசிரியைகளால் முடியக்கூடிய காரியமே. உங்களில் எவருக்கும் அவ நம்பிக்கை கொஞ்சமும் வேண்டா போர் முனேகளில் பணிபுரியும் வீரர்களின் குடும்ப நலன்காேப் பாதுகாக்கத் தனிக்கவனம் தேவை. ஆசிரியர்களோ தமிழ் நாடெங்கும் சிற்றுர்தோறும் இருக்கிருர்கள். அவர்கள்தான் கவனம் முழுவதையும் செலுத்தி இதை நன்ருகச் செய்யமுடியும். இதற்கு, மதுரை மாவட்ட ஆசிரியர்கள் வழிகாட்டியுள்ளனர். வசதியும் ஒய்வும் உடைய ஆசிரியர்கள் பலர் முன்வந்து
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/36
Appearance