உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வானம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 3 செவ்வானம் முன் ஒடிய நபர் அங்கு ஒதுங்கியிருக்கும் கிணறு நோக்கிச் செல்வதை உணர்ந்தான் அவன். ஒருவேளை கிணற்றிலே விழுவதற்கு விழுந்து சாவதற்குத் துணிந்து வந்த யாராகவாவது இருக்கலாமோ? இந்நினைப்பு அவன் கால்களுக்குக் குதிரை வேகம் கொடுத்தது ஓடினான். அவன் ஊகம் தவறவில்லை. அவன் பாய்ந்து ஓடிப் பற்றியபோது அவனது வேட்டைப் பொருள் கிணற்றின் சிறு துவளத்தின்மேல் ஏறிக்குதிக்க முயன்றதை அறிந்தான் ஆவேசமாகக் கைவீசிப் பற்றினான் பிடித்துப் பின்னுக்குஇழுத்தான் திடுக்கிட்டான் 3 அன்றிரவில் கந்தர்வ கலா மண்டபம் திறந்துவைக்கச் சுபமான நாள் என்று முகூர்த்தம் பார்த்து, பிரமாத ஏற்பாடுகள் எல்லாம் செய்து, சிறப்பாக விழாக்கொண்டாடிய புண்ணிய நாளின் பின்னரவிலே, துக்கம் பிடிக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் தாமோதரன் மட்டுமல்ல; அவனது திடீர்க் கூத்துக்குத் திட்டமான அரங்கம் அமைத்துக் கொடுத்த செல்வர் புன்னைவனநாதரும் கூடத்தான்! - சுகபோகத்தின் சித்திரிப்புகளில் ஒன்றாகத் திகழும் ஜோரான ஸ்பிரிங் கட்டிலில், பூம்பஞ்சு மெத்தையில் விழுந்துகிடந்த புன்னை வனத்துக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. குளுமையான நிலவுபோல் நீல ஒளி சிந்தும் மின்சார விளக்கு கண்ணுக்கு இனிய அலங்காரி போல் ஆடாமல் அசையாமல் காட்சி தருவதை ர்சிக்கவில்லை.அவர் ஓயாத கீதம்போல நொய்ய்யென ஒலித்துச் சுழன்று சுகமாகக் காற்றை அசையும்படிவிரட்டியிருந்த எலெக்டரிக்விசிறியிலே அவர் ரசனை லயித்துவிடவில்லை. கட்டில்மீது தொங்கிய பூந்திரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/20&oldid=841380" இலிருந்து மீள்விக்கப்பட்டது