உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நூல்களையும் பயின்றவர் நன்கு அறிவர். மேலும் சில கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து அவர்கள் வழி உலகுக்கு வழிகாட்டும் நெறியும் இருவராலும் போற்றப் பெற்றதாகும். ஷா தம் இளமை வயதிலேயே பிறவாத ஒரு தங்கையைப் பிறந்ததாகக் கற்பனை செய்து கொண்டமை போன்றே (My Dear Dorathy) மு. வ. அவர்களும் தம்பி, தங்கைகளைக் கற்பனை செய்து கொண்டு, அவரைப் போன்றே கடித வாயிலாகக் கருத்துகளையும் சூழலையும் நாட்டு நிலையையும் பிறவற்றையும் விளக்கும் மரபினையும் உணர்தல் வேண்டும். மேலும் இப்படியே வெல்ஸ் எழுதிய o–G#Gg5ífum udgöfgG6T (The Invisible Man) utgir குடிசையில் ஆதிக்கம் செலுத்துகிருன். பெண்களுக்கு ஏற்றமும் சிறப்பும் பெற்றியும் தருவதில் மு.வ. ஷாவிற்கு இளைத்தவரல்லர் என்பதையும் இவர்தம் நாவல்கள் நமக்கு விளக்குகின்றன. (சிலவற்றை அவ்வந் நாவல்களைப் பற்றி காணும்போது இயலுமாயின் காணலாம்). அன்பு, காதல், வறுமை, வாழ்க்கைப் போராட்டம், பொருளாதாரச் சமத்துவம், கலை போன்றவற்றிலும் இருவர் கருத்தும் பெரும்பாலும் இணைந்து செல்வதையே காண்கிருேம். இவ்வாறே பல காணலாம். என்னும் மற்ருென்று விரித்த லாகும் என்ற நிலை கருதி இந்த அளவோடு அமை கின்றேன். அறிஞர் மு.வ. அவர்கள் திரு.வி.க. வொடு பழகிய தன்மையினை முன்னர்க் குறிப்பிட்டேன். மு.வ. வின் தமிழ் நடையே திரு.வி.க. வின் நடை தான் எனப்பலர் கூறுவதை நீங்கள் அறிவீர்கள். ஷாவினைப் போன்றே திரு.வி.க வின் நடைமட்டுமன்று கருத்து முதலியனவும் மு.வ. வைப் பற்றிப் பிணித்தன எனல் மிகையாகாது. இவர் திரு.வி.க. பற்றியும் தனியாக ஒரு நூல் எழுதியுள்ளார். மேலே வடிாவைப் பற்றிக் காட்டிய குறிப்புகளைப் போன்று இதிலும் பல காட்டலாம். என்றலும் அளவும் அமைப்பும் கருதி. ஒரிரு இடங்களை மட்டும் ஈண்டுச் சுட்டி மேலே செல்கிறேன்.