1 IBTsūrūpālb (Introductory) தஞ்சையில் ஆட்சிபுரிந்த விஜயராகவ நாயக்கருக்கும், மதுரையில் ஆட்சிபுரிந்த சொக்கநாத நாயக்கருக்கும் பகைமையிருந்து வந்தது. ஒருசமயம் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கரின் மகளாரை மணம் வேட்டார். தஞ்சை நாயக்கர் தன் மகளை மகட்கொடை நேர்தற்கு விரும்பவில்லை. மதுரை நாயக்கர் தஞ்சைமேல் படையெடுத்தார். தஞ்சை நாயக்கராகிய விஜயராகவர் தன் அரச குடும்பத்தவர் எல்லோரையும் பார்த்துத் தான் வெற்றி பெற்று வாராவிடில் இறந்துபடுக என்று கூறி இதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்து போர்க்குச் சென்றார்; போர்க்களத்தில் இறந்தார். முன்னமே ஏற்பாடு செய்தவண்ணம் அந்தப்புர மகளிர் யாவரும் இறந்தனர். எனினும் விஜய ராகவருடைய மாதேவியருள் ஒருவர் தன் நான்கு வயது மகனை ஒரு தாதியிடம் கொடுத்துத் தப்பியோடுமாறு செய்தார். தஞ்சை நாயக்கர் இறந்ததும், மதுரைச் சொக்கநாத நாயக்கர் தனது தம்பி அளகிரி என்பவரைத் தஞ்சையில் ஆட்சி செய்யுமாறு அனுப்பினார். சில ஆண்டுகள் மதுரைக்கு அடங்கியிருந்த அளகிரி, சுயேச்சையடைய விரும்பினார். இங்ங்ணம் அளகிரி மாறியது அவருடைய "அமைச்சர் ஆகிய ராயசம் வெங்கண்ணா” என்பவராலேயேயாம். இதற்கிடையில் விஜயராகவ நாயக்கருடைய மகன் செங்கமலதாசு என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் வளர்ந்துவருவதை அறிந்த வெங்கண்ணா அளகிரியை நீக்கிச் செங்கமலதாசை அரசனாக ஆக்க நினைத்தார்; நாகப் பட்டினத்துக்குச் சென்றார்: செங்கமலதாசுடன் பீஜபூருக்குச் சென்றார்; பீஜபூர் சுல்தான் உதவியை நாடினார். பீஜபூர் சுல்தானும் தன் தானைத் தலைவராக விளங்கிய ஏகோஜியைப் பெரிய தானையுடன் அனுப்பினார். | =
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/11
Appearance