உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பெயர்கள் ஆகும். திருமணத்திற்குப் பிறகு மாமியார் தன் மருமகளுக்குப் புதுப் பெயர் இடுவது மராட்டியர் வழக்கம். அவ்வழக்கப்படி இம்மாதர்கட்கும் புதுப் பெயர்கள் தரப்பெற்றன. ஆதலால் இப் பெயர் மாறுபாடு காணப்பட லாயிற்று. மேலேகாட்டிய எண்மரையும் பார்த்து " நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள் ? " என்று கேட்டபொழுது ' நமக்குத் தெரியாமல் நாம் கொடுத்த மாதிரி ஒரு பிராது கவர்ன்மெண்டுக்குப் போய் வந்தது : . அவ் விஷயத்தைப்பற்றி நம் காரியஸ்தர்கள் நம்மைக் கேட்டதில் நமக்குத் தெரியா தென்று சொன்னேறும். அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது' என்று மறுமொழி பகர்ந்தனர். இது நிகழ்ந்த காலத்துக்கு ( கி. பி. 1856க்கு ) அறுபதாண்டு கட்குப் பிறகு நடந்த ஒரு வழக்கில்' யோகாம்பாள்" என்ற (தர்பார்) அக்காவை விசாரித்தபொழுது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ' இவர்கள் பதினைந்து பேரும் எட்டும் ஏழுமாகப் பிரிந்து இருந்தமைக்குரிய காரணம்' பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : " சிவாஜி இறந்த ஓரிரு மாதங்கள் கழிந்ததும், " சுவீகாரம் எடுத்துக் கொள்ள அரசாங்கத்துக்கு உத்தரவுபெற எழுதவேண்டும்' என்று தர்பாருக்கு உரியவர்களிடம் யோகாம்பாள் வழி பாயி சாயேபுகள் சொல்லியனுப்பினர். அவர்கள் இது பற்றி எழுதியுள்ளதாகவும் மேலிடத்தினின்று பதில் வரவில்லை என்றும் மறுமொழி பகர்ந்தனர். அவர்கள் எழுதினார்களோ இல்லையோ என்று பாயிசாகேபுகளுக்கு ஐயம் தோன்றியது. ஆகவே 15 பாயி சாகேபுகளும் அரசாங்கத்துக்கு ஒரு ' பத்திரம் ' எழுதினர் ; மாப்பிள்ளை சக்காராம் சாகேபு தன் மனைவிக்கு அரசு பெற வேண்டி எழுதவில்லை போலும் என்று கருதினர். இதனையறிந்ததும் சக்காராம் சாகேபு அவர்கள் 15 பாயி சாகேபு களை இரு பிரிவுகளாகப் பிரித்தார் ; எண்மரை ராம் மாடியில் ' தங்கச் செய்தார் ; எஞ்சியவரைச் சதர் மாடியில் ' இருக்கச் செய்தார். இதுவே எண்மரும் எழுவரும் ஆகப் பிரிந்துறை வரலாறு என்று தெரிகிறது. 8. " A new name is given to every girl at her marriage and she is known for the future only by that name. This is the custom among all Mahrathas. The old name is cast off from marriage. ... ?" Page 37. Deposition of M. S. Ghantigai, O. S. No. 26 of 1912 in the Subordinate Judge’s Court, Tanjore (on 11–8–1916). 9. 4–150 10. 4-152 11. O. S. 26 of 1912 in the Court of the Subordinate Judge of Tanjore. 12, 4-156 : இவர் இரண்டாம் சிவாஜி காலத்தில் அக்கா கூட்டத்தில் சேர்ந்து இந்த வழக்கில் சாட்சி கூறும் காலத்து 85.88 வயதுடையவராக இருந்தவர். 13. P. 4, lines 23 to the end - Deposition of Yogambal, O, S. 26 of 1912 (on 15–2–1916)