உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

வப்பட்டது. பிறகு, தொழில்களுள் தலைசிறந்த உழவினுக்கு முதற் கருவியாம் நிலனும், கிலம் பிறத்தற்கு முன்னர்த்தோன்றி அதனேச் சூழ்ந்த கடலும், இவை யிற்றை விளக்கும் ஒளிகளாகிய பரிதி, மதி, விண்மீன்களும் அமைவனவாயின. இவற்றின்பின் கிலத்திற் ருேற்றப்பொலிவொடு விளங்கும் மலையும், மலேயினின் நிழியும் யாறும், கிலனே மண்டலித்துச் சூழ்ந்துள்ள வளியும், யாற்றுநீர் வள முறுதற்காம் முகிலும், கின்றன. இவையிற்றின் பின்னர்க் காலப் பகுதிகளாகிய காலயும் இரவும், இரவின்கண் வேண்டற்பாலதாய துயிலும் முறையே அமை க்கப் பெற்றன. மனிதன் இயற்கை கலங்கண்டின்புறுதற்குச் சான்ருகத் தோன்றும் பொழிலும், பொழிலிலுள்ள மலரும், அங்கு வாழும் புள்ளும், முறைபட அமைந்தவாம். இவையிற்றின் பின்னர் மனிதனுக்குள முக்குற் றங்களாம் காமம், வெகுளி, மயக்கங்களை வைத்தனர். காமத்திற்குக் கருவியா பவர் கணிகையாாதலின் காமத்தைச் சார வரைவின் மகளிரை வைத்தனர். இம்முக்குற்றங்களையு ங்ேகியானே பிறவி நோய் நீங்கி விடடைவன் என்பத. னேக்,

காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்

நாமங் கெடக்கெடும் நோய்,' - (திருக்குறள் - 360) என்ற அருமைத் திருக்குறளாற் கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவனுரை யவற்றின்பின் வைத்தனர். போர்' எறும்பு என்பவை ஆசிரியர் இாண்டாம் பதிப்பு வெளியிட்ட பின்னர் எழுதப்பட்டவையாதலின், அம்முறைபற்றி இப்பொழுது என்னல் ஒரு முறையுமின்றிப் பின் சேர்க்கப்பெற்றன. யான் ஏதோ என் மனதுக்குத் தோன்றியவாறு வைப்புமுறை யொழுங்கை யோரா ங்கு விளக்கியது பற்றிக் கல்விகலஞ் சான்ற பெரியோர் râr யெள்ளி நகை யாடாதுவிட வணங்கி வேண்டுகின்றனன். •

. ஆசிரியரியற்றிய செய்யுணுரல்களுட் சிலவற்றிற்கு முன்னரே என் சிற்றறி விற் கெட்டியவாறு குறிப்புரை யெழுதப் புகுந்தேனதலின், இந்நாற்கும் எனக்குப் புலப்பட்டாங்குக் குறிப்புரை பொறித்துள்ேன். பிழையுளவேற் பெரியார் பொறுத்தருள்க. - ஆசிரியர்தம் நூல்கள் பலவற்றையும் ஒருசேரத் தொகுத்தும் தனித்தனி யாயும் இன்றியமையாக் குறிப்புரையோடு அச்சிட்டுத் தமிழுலகிற்கு அளிக்கக் கருதிய அன்னர் தம் குமாராாகிய சிரஞ்சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட நன்முயற்சி இடையீடின்றி இனிது நிறைவேற எல்லாம். வல்ல இறைவனே மனமொழி மெய்களால்,இறைஞ்சுகின்றேன்.

அண்ணுமலைநகர், ; இங்ானம்,

10-10-1933 ந. பலராம ஐயர்.