பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88: தமிழகக் கலைகள் வடமொழி காட்டிய நூல்கள் தமிழில் பெயர்த்தெழுதப் பட்டன: அவற்றுள் (1) மகாபரத சூடாமணி, (2) அபிநய தர்ப்பணம் (3) அபிநய தர்ப்பண விலாஸம், (4) பரவராக தாளம், (5) சுத்தானந்தப் பிரகாசம், (6) ஆதிமூல பரதம், (1) பரத சாஸ்திரம், (3) பரத சேபைதியம், (9) சபாரஞ்சித சிந்தாமணி என்பன குறிக்கத்தக்கவை. இவற்றுள் சில இன்னும் அச்சாகவில்லை. தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தது முதல் வழி வழியாக நடனக் கலை பயின்று வந்த மரபினர் அப்பயிற்சியை விட்டுவிட்டனர். கோவில ஊர்வலங்களில் அதுகாறும் கடனமாடி வந்த முறையும் ஒழிந்தது. சில ஆண்டுகளில் நடனக் கலை இறந்துபட்டது என்று கூறலாம். படக் காட்சி சிறந்த முறையில் வளரத் தொடங்கியது முதல்ஏறத்தாழப் பதினேந்து ஆண்டுகளாகத்தான்-தமிழகத்தில் பலரும் நடனக் கலையைப் பயின்று வருகின்றனர். இறைவன் ஆடிய நடன வகைகள் இன்று ஆடப்படுகின்றன. குற்ருலக் குறவஞ்சி முதலியனவும் அபிநயத்தில் காட்டப் படுகின்றன. இன்று அக் கலையில் ஆர்வமுள்ள எல்லாச் சாதியினரும் அக்கலையைப் பயிலுகின்றனர். இது வரவேற் கத்தக்க வளர்ச்சியாகும். 13. பரத சாஸ்திரம்-தமிழில் எழுதியவர் அரபத்த நாவலர். முதல் அத்தியாயம் பாவவியல் கரலசுடிணங்கள் யாவும் தெளிவுறுத்துகிறது. -