உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழகக் குறுநில வேந்தர்கள்


நாகன் மகளாகக் கருதப்படுதலான் வியாள எனப்பட்டு அதுவே வேள, வேள் என மாறியதென எளிதில் உணரலாம். பத்ம நாக ஸரஸ் உள்ள தலம் வேளுர் என இன்றும் வழங்குதல் காணலாம். வடமொழியில் வியாள பதம் அரசனுக்கும், மதயானைக்கும், பாம்பிற்கும் வழங்குவதாகும். தமிழில் வியாழன் என்பது ராஜா, குரு என வழங்குதல் காணலாம். வேழம் என யானைக்கு வழங்குதலும் நோக்குக.

"வெள்ளி விடையேறி வியாழம் புனைந்தாரை"

எனப் பாம்பிற்கு வருதல் காண்க. வியாதன் வேடன், வேடு என வருதல் போல, வியாளன், வேளன், வேள் என வந்ததாகக் கொள்ளலாம். தமிழில் வேள் ஆஅய் என்னும் வள்ளல் நீல நாகத்தால் நல்கப்பட்ட கலிங்கமுடையவனாதலும், அண்டிரன் எனப்படுதலும், நாகமாலை வழைப்பூங்கண்ணி (புறநானூறு 131) புனைதலும் ஏற்ப நோக்குக. அண்டிரன் என்பது அஹிந்திரன் என்பதன் சிதைவு ஆகும். ஆயினும், "அண்டிர்" என்பது மேகங்கட்குப் பெயராகக் காச்மீரி மொழியிற் காணப்படுதலால் அண்டிரன் என்பதற்கு மேகங்களை ஏவிக் காரியங்கொள்ள வல்லவன் என்றேனும், மேகத்தை ஒத்தவன் என்றேனும் கொள்ளலாம். ராஜதரங்கினியில் "நாகர் மேகவுரு வெடுத்து விசும்பை மறைத்தல்" (3-21) காணலாம். இதனால் இந்நாக குலத்திற்கு மேகத்தோடுள்ள இயைபு தெரியலாம். இனிச் சதப்பதப்ராம் மனத்தில், சக்கரவர்த்தியை ஐந்த்ராபிஷேகம் செய்யவும் பின் சிறப்பு குறித்து இவனை ஐந்திரனாக்கினரோ என நினைத்தலுங் கூடும். இம்முன்றிலும் மேகசம்பந்தத்தால் அண்டிரன் என்பது திரிபில்லாத பெயராதல் பற்றி நன்கு பொருந்தும். வேளிர் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் வேட்கோவர் மலையாள நாட்டில் அண்டிரர் என்னும் பெயரான் இன்றும் வழங்கப் படுகின்றனர். (லோகன் துரையவர்கள் மலையாள வரலாறு பார்க்க). தரங்கினியுடையார் இப்பெயரானே நீல