ரா.இராகவய்யங்கார்
23
இச்சுனையினின்று காசிபர் நீலனை உண்டாக்கி நீலநாகனை ஆளச் செய்தவாறு தரங்கினியிற்கண்டது. ஸதீஸரஸ் ஆகிய நீலநாககுண்டம் பெரிய இடத்தையுடைய சுனையால் ராஜதரங்கினியால் (1, 25) அறிக. தடவிற்றோன்றி என்றது நீலநாகன் அதன் கட்டோற்றஞ் செய்த வரலாற்றைக் குறித்ததாகும். தடவிற்றோன்றி இயற்றிய புரிசைத் துவரை என இடத்திற்கே அடையாக்கினும் கச்மீர சரிதத்தொடு நன்கு பொருந்தும். துவரையைத் தலைமையாகக் கொண்ட நாடு ஆதியிற் காசிபன் உண்டாக்கிய சுனை நீர் நிலையினின்று தோற்று வித்த நிலமாதலான் இயைபு உணர்க. செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசையுடைமை கூறியது இந்நாட்டு முற்காலத்துச் செம்பு மிகுதியாகக் கிடைத்தது பற்றியென நினையலாம்.
இந்நாட்டுச் செம்புச் சுரங்கம் உண்மை பிற்காலத்தும் அறியப்பட்டதாகும். (4-616) புறப்பாட்டுரைகாரர் "செம்பாற் புனைந்து செய்தாலொத்த..... புரிசை” எனக் கூறுதலான் இது வருணனையெனினுமமையும். தெற்கண் வந்த இவ்வேள் குலத்தவனான நன்னன் கொண்கானத்து எடுத்த பாழி என்னும் மலைக்கோட்டை யினைச் "செம்புறழ் புரிசைப் பாழி" (அகம் 375) எனப் பாடுதலான் இவ்வுண்மையுணர்க. துவரை என்பது இக்கச்மீர தேயத்து வேள்நதியூடு பாயும் ராஹலேப. புறமாகிய துவாரவதிச் சேகரத்துத் துவாரவதி என்னும் பழைய தலைநகராகும். இம்மலைப்புறமே துவாரவதிப் பற்றாதல் ஐந்தாந்தரங்கம் 225-ஆம் சுலோகவுரையில் "போலியசாகா" என்னும் ஊர் வராஹமூலத் தருகிலுள்ள துவார வதியிலுள்ளது என்று விளங்கவுரைத்தலான் அறியலாம்.(Stein Rajatharangini, V-225) 215-ஆம் சுலோகத்தில் வீர நாகா என்ற ஊரைக் குறித்த இடத்தும் இவ்வூர் என உரைகாரர் உரைத்தனரென்ப. இப்பக்கத்துத் துவாரவதித் என்ற சிதைந்த பெயரின் ஓர்