உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவய்யங்கார்

25


ரென்க. நீலநாகன் வழியினர் பெயர் கூறப்படாதவர் சீராமர் காலத்தவர் அல்லது அவர்க்கு முற்பட்டவர் என்றும் அமையும். இதனால், கச்மீர வேந்தர் வழிமுறை பாரத காலத்தையடுத்துக் கோநந்தன் முதலாகவே உண்டாயினதென்று நன்குதுணியலாம்.

கோநந்தன் ஜராஸந்தனுக்குத் துணையாய்ச் சென்று வடமதுரையிற் பலபத்ரனை அலாயுதனாற் கொல்லப்பட்டான் என்றும், (Stein Raajtharangini 1, 59) இவன் மகன் தாமோதரன் ஸிந்து நதிக்கரையிலுள்ள கந்தருவரால் (காந்தார நாட்டாரால்) ஏற்படுத்தப்பட்ட ஸ்வயம்வரத்துச் செருக்கிப்புக்குச்சக்கிரதரனால் உயிரிழந்தனரென்றும், இத்தாமோதரன் மனைவி யசோவதி என்பாள் கருவுற்றிருந்தாளை அக்கண்ணபிரான் முடிசூட்டினன் என்றும் (1,70) அப்போது பெண்ணரசாள்வதைக் குடிகள் வெறுக்கக் "கச்மீரதேசமே பார்வதியாம்” (1, 72) என்று கூறி அவ் வரசு நிலையிட்டனன் என்றும் (1,70-78) தரங்கினி நூல் கூறும். இதனால் இவ்வரசு நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழியாகவும் சொல்லப்படும் என்று நினையலாம். பிறப்பு வழி கொள்ளாது முடிசூடும் வழியே அரசு வழி முறையாகக் கொள்ளுதல் சரித நூல்களிற் கண்டதேயாகும்.

உண்மையில் நீரில் மூழ்கிய பூமிதேவியை முதல் முதல் வராகமூர்த்தியாகி இறைவன் எடுத்து வெளிவந்த வாயில் வராஹத்வரா என்றறியப்படுதலால், அந்தத் துவாராவில் உண்டாகிய அரசர் நிலங்கள் தந்த நெடுமுடியண்ணல் வழியினராயினரென்பது நன்கு பொருந்தும். இவ்வரா ஹத்வாராவில் முதலில் உண்டாகிய சிறப்பால் வேளிர் தம்மை "இருக்கில் வரும் பெருந்தகைக்கு மெத் தனைக்கும் பழையோம்" (குலோத்துங்க சோழதேவர் பிள்ளைத் தமிழ் 95) எனச் சொல்பவராயினரென்க. சங்க நூல்கள் தொன்முது வேளிர்என்பதும் இக்கருத்தை பற்றிய