உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழகக் குறுநில வேந்தர்


தேயாகும்.புராணேதிகாச வரலாறும்,சங்க நூல் வரலாறும் கொண்டு நோக்கின் வேளிர் அகத்தியருடன் தென்னாடு புக்கது பரசுராமாவதாரத்திற்கு முற்பட்டதாகும். பரசுராமனுக்கு முன்னே புகார்ப்பட்டினம் காந்தன் என்னுஞ் சோழனாற் , காக்கப்பட்டமை மணிமேகலையான் (22) அறிக. ஜலெளகன் 49-ஆம் வழிமுறையானதால் ராஜ தரங்கினியால் (Indian Antiquary, Vol XVIII) உணர்க.

இருங்கோவேள்

இவனையே கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் குறித்தனரென்பது. கபிலர், இவனுடைய அரிய பெரிய கொடைத் திறத்தையும் அவன் முன்னோர் வன்மையையும் பாராட்டி "உவரா வீகைத் துவரையாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிர்" எனக் கூறியதனால் அறியப்படுவது. புறப்பாட்டுரைகாரர் ஈகைத் துவரைக் கேற்றாது வேளிர்க் கேற்றியுரைத்தல் காண்க. வேள் புலவரசராகிய சலெளக்கியர்க்கு மூலபுருடன் ஆதற்குரியவன் சலெளகன் என்னும் பெயருடைமையும், வராஹமூல க்ஷேத்ரமுடைய (Stein's Cashmera (Map) இந்நாற்பத் தொன்பதாமவன் வழிமுறையளவிற் கூறியது, இவன்பின் இந்நகரமாண்ட தாமோதரன் என்பவன் ஒரந்தணனாற் சபிக்கப்பட்டுப் பாம்பாயினன் (ராஜதரங்கினி) என்பது பற்றியெனக் கொள்ளலாம். உவரா ஈகை என்பது 'வெறுப்பில்லாத கொடை" என்றார் உரைகாரர். மக்கட்டாசையை இரப்பார்கண் வெறுப்புண்டாதல்லது இரக்கமுண்டாகாமை நினைக. அவ்வாறிரந்தான்கண் வெறுப்பில்லாமல் பிறிதோருயிரைக் கொல்லர்த் நல்லருளால், தன் உடம்பையே உண்கவெனக்கூறிய கொடை வீரத்தையே ஈண்டுப் பொதுவாக வைத்துப் பாராட்டினாரென்று கொள்க.