உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

47

வழிபாடுடையராதல் பற்றித் தெலுங்கரால் அரவரென வழங்கப்பட்டனரோ என ஈண்டைக்கு ஏற்ப நினையலாம். கேரளோத்பத்தி என்னும் நூல் மலையாளத்றில், ஆரியர் குடியேறுதற்கு முன்னே நாகரே இருந்து வாழ்ந்தனரெனக் கூறும் (Asiatic Research Journal. ix, 216-218) சிங்களத்தையும் அதனையடுத்த தீவுகளையும் ஆண்டவன் மோரகன் என்றும் இவன் கச்மீர வேந்தன் ப்ரவரஸேனனுடைய மந்திரியென்றும் தரங்கினி (III 356) கூறும். இவன் ஆட்சியுட்பட்ட கடற்கரைப் புறம் மாறோகம் எனப் பெயர் பெற்றதோ என ஊகித்தலுமாகும். மாறோகம் கொற்கை சூழ்நாடு என்பது தொல்காப்பியச் சேனாவரையத்திற் கண்டது. மஹோரக பூமி (பெரு நாகநாடு) எனப்பட்டு தாளடைவிற் சிதைந்ததோ என நினைத்தலுமாகும். இனி ஒகம் கருடனெனக் கொண்டு கருடனொடு மாறு கொண்ட நாடு எனக் கருதி, அதுவே நாகர் வதித இடம் எனினுமையும். ஓக கேது கருடகேதனன் (ராஷ்ட்ரகூட வேந்தன் அமோகவர்ஷன்) என்பது காண்க. Bombay Gazetteer, vol. 1, p. II, 402) பாண்டி நாட்டுத் தென் கீழ்பால் உள்ள ஒளி நாட்டார் (தொல் சொல்) பட்டினப் பாலையுள் ஒளியர் எனப்படுதலும் இவரை நச்சினார்க்கினியர் பிற மண்டலங்கட்கு அரசாதற்குரிய வேளாளர் என்றலும், கடன் மல்லைச் சாசனம் ஒளி நாகன், ஒளி நாகன் எனப் பலரைக் கூறிக் காட்டலும் கொண்டு இத்தென்னாட்டுக் கச்மீர தேயத்தார் பழைமையில் குடியேறியது துணியலாம். ஒளி நாகர் கச்மீரத்தில் தேஜவன நாகர் ஆவர். மணி மேகலை நூல் நாகநாடு, காந்தார தேசத்திற்குரிய பூருவதிக்கில் உள்ளதென்று கூறுதலால், அது கச்மீரமேயெனத் தெளியப்பட்டதேயாகவும், தெற்கணுள்ள நாட்டு நாகர் வரலாறு காணப்படின் அது வடநாட்டு நாகர் தெற்கட் குடியேறி இருந்த காலத்து நிகழ்ச்சி ஆகுமெனத் துணிதற் கண் ஐயமேயில்லையென்க. கச்மீர நாட்டார், நீலன், பதுமன், சேஷன், கார்க்கோடகன், தக்ஷகன் என்னும் பெருநாகர் ஐவரைச் சிறப்பித்துப் போற்றும் ஐவகை