உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களுடைய நாகரிகத்தில் தெய்வ வணக்கம் பற்றிய சான்றுகள் கிடைக்காவிடினும் திரிசூலம் இருப்பது வேட்டைக்குரிய அல்லது போருக்குரிய தெய்வத்தை அவர்கள் ஆராதித்தனர் என்பதைவிளக்குகிறது. வேட்டைக் குரிய தெய்வமே, போருக்குரிய தெய்வமாக மாறும். கொற்றவை, வேடர்களின் தெய்வமாகயிருந்தது. பின்னர் அரசர்களது வீரத் திருமகள் ஆனதைப் பண்பாட்டு வரலாற் றில் காண்கிருேம். அது போலவே கிரேக்க வேடர் தெய்வ மான பல்லாஸ் அதீஞ, டையான என்ற போர்த் தெய்வ மாகிருள். அது போலவே வேலையேந்தும் தெய்வமும் வேட்டைத் தெய்வமாகவும் போர்த் தெய்வமாகவும் இகுத்திருக்கவேண்டும். சேவல் போருணர்ச்சியின் சின்னம் என் உலகில் பல இனக்குழு மக்களால் அடையாளமாகக் (Tatemic symbol) F=mcistů Lie:Geirsts»z மானிடவியல்ார் விணக்கியுள்ளனர். - . கி. மு. 3ஆம் நூற்ருண்டிலிருந்து கங்கைச் சமவெளி மக்களின்ட்பேiம், தமிழ்க ம்க்களிடையேயும் இளமைக் கடவுள், போர்க் கடவுள், காதல் கடவுள் என்ற தன்மை தோடு ஸ்கத்தன் என்ற தெய்வக் கருத்து வளர்ச்சி பெற்றதைக் காண்பதற்குத் திடமான சான்றுகள் கிடைக் கின்றன. அதனைத் தொடர்ந்து விவரித்து இரண்டும் இயைந்து ஒரே இந்தியக் கடவுளான விதத்தைக் கூர்ந்து காண்பேகம். - ; : . . - முதலில் தமிழகச் சான்றுகளே நோக்குவோம். தமிழ் நாட்டில் மிகப் பழைமையான வணக்க முறைகளில் முருக வணக்கமும் ஒன்று" என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வர். பழந்தமிழ் இலக்கியத்தில் முருகு, முருகன் ஏறை இரண்டு பெயர்களுடைய தெய்வங்களும் ஒரே இதய்வத்தையே "குறிப்பிடுகின்றன. வேலன் இத்தெய்வத் இன் பூசாரி (கோமரத்தாடி). மலையாளத்தில் இவண் ன்ேனிச்சப்பாடு என்பர். 1४'x - ' ' இத்தெய்வம் கொற்றவை சிறுவன்’ என்று அழைக்கப் பெறுகிருன் கொற்றவை, பழையோள், காடுகாள், ஐயை go