பக்கம்:தமிழ் அங்காடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 தமிழ் அங்காடி


பிறப்பு வளர்ப்பு

வியப்பிற்கு உரிய இந்தத் தொலைபேசிக் கருவியைக் கண்டு பிடித்தவர் 'அலெக்சாண்டர் கிரகாம் பெல்’ (Alexander Graham Bell) என்பவ ராவார். இவர் ஸ்காட்லாந்து நாட்டில் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஊமை - செவிட்டுப் பிள்ளைகளின் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது தந்தை இவருக்கு வீட்டிலேயே கல்வி தந்தார்.

இப்போது குழந்தைகள், நம் நாட்டில் ஏறக்குறைய இரண்டு அகவை முடிந்தால் சிறார் பள்ளியிலும், மூன்று அகவை முடிந்தால் எல். கே. ஜி. (L. K. G.) வகுப்பிலும், நான்கு அகவை முடியின் யு. கே. ஜி. (U. K. G) வகுப்பிலும், ஐந்து அகவை முடிந்த பின் முதல் வகுப்பிலும் சேர்க்கப் படுகின்றனர். இரண்டு அகவை முடிந்ததுமே வீட்டிலிருந்து வெளியேறுகின்றனர்.

ஆனால், கிரகாம் பெல் பத்தாவது அகவையில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையிலேயே நன்கு விளையத் தொடங்கி விட்டது. கிரகாம் பெல் பதினைந்தாம் அகவையிலேயே எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார்; பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து பயின்றார்.

கிரகாம் பெல்லின் குடும்பத்தினர் 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து, அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடா என்னும் நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். ஓரளவு அறிவு முதிர்ச்சி பெற்றதுமே கிரகாம்பெல் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி பெற்றார்.

இங்கிலாந்தில் வித்திட்டு வளரத் தொடங்கிய பயிர், நாற்று பறித்து அமெரிக்க வயலில் நடப்பட்டு விளையத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/18&oldid=1203024" இலிருந்து மீள்விக்கப்பட்டது