பக்கம்:தமிழ் இனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இனம்

17

லும் அளவிற்கு மனிதன் மனிதனை வெறுத்தான்; நாயினும் கீழாக மதித்தான். உயர் வகுப்பானைக் கண்டவுடன் மற்ற வகுப்பாருள் ஒவ்வொரு சாதியானும் இவ்வளவு தூரத்தில் விலகி இருக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. உயர் வகுப்பார் வாழும் இடங்களில் தாழ்ந்த வகுப்பார் வரலாகாது என்றும், அவர் வாழும் தெருக்களில் நடத்தல் கூடாது என்றும் கட்டளைகள் பிறந்தன. இங்ஙனம் பொது மக்கள் நடமாடும் கோவில் முதல் தெருக்கள் ஈறாக உள்ள எல்லாப் பொது இடங்களிலும், ஒரே இனத்தாருக்குள் எண்ணிறந்த பாகுபாடுகள் ஏற்பட்டன. இவ்வேறுபாடுகள், ‘இவரைவிட நாம் உயர்ந்தவர்’ என்று செருக்குக்கொள்ளப் பயன்பட்டனவே தவிர, இன வாழ்வு அமைதியாக நடத்தப் பயன்படவில்லை. உடம்பின் எல்லா உறுப்புக்களுக்கும் சமமாகச் செல்லவேண்டும் இரத்த ஓட்டம் தலைக்கும் கழுத்துக்கும் அதிகமாகச் சென்றும், இடைக்கும் கால்களுக்கும் வேண்டும் அளவு செல்லவில்லையாயின், அம்மனிதனுடைய தலையும் கழுத்தும் பருத்துக் காணப்படும்; இடையும் கால்களும் மிகச் சிறுத்துக் காணப்படும். இத்தகைய மனிதனைப் பிறர் பாராட்டுவரா? தம்முள் ஒருவனாக ஏற்றுக் கொள்வரா?

சமய மாற்றம்

இந்தப் பரிதாபத் தோற்றமுடைய மனிதனைப் போலவே பொதுவாக இந்திய இனமும், சிறப்பாகத் தமிழ் இனமும் காட்சி அளித்தன. இந்நிலையில் ‘பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை’ என்று கூறிக் கொண்டு இசுலாம், கிறிஸ்துவம் என்னும் சமயங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/14&oldid=1371606" இலிருந்து மீள்விக்கப்பட்டது