பக்கம்:தமிழ் இனம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் இனம்

கள் இந்நாட்டுக்கு வந்தன. மக்கள் சிலர் மதம் மாறினர்.

தாகூர் கூற்று

தமிழ் இனத்தவருள் இலட்சக் கணக்கான மக்கள் இங்ஙனம் மதம் மாறிய பிறகும், இந்து சமயத் தலைவர்கள் தமது சமயக் குறைபாடுகளை உணர்ந்து திருத்தம் செய்யவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் இச் சாதிகளைக் கண்டித்துள்ளார்; காந்தியடிகள் கண் ணிர் விட்டுக் கதறிஞர். தாகூர் வருந்திக் கூறியுள்ளதை இங்குக் காண்க:

“இந்து சமயம் தனது சாதிக் கட்டுப்பாட்டினல் வேறுபாடுகள் உண்டாக்கியதே அன்றி ஒற்றுமை உணர்ச்சியை உண்டாக்கவில்லை சாதிகள் ஒன்று சேருவதைத்தடுக்க, ஒவ்வொரு சாதிக்கும் இடையே நீக்க முடியாத சுவர்களே எல்லைகளாக வைத்து விட்டது. இதனால் அது தன் மக்களுக்கு அமைதியையும் ஒழுங்கையும் கொடுத்ததே அன்றி, மக்கள் ஒருவரோடொருவர் கலந்து பழகி மன விரிவு கொள்ள வசதியளிக்கத் தவறிவிட்டது; இதனால் இந்து சமயச் சமூக அமைப்பு உயிரை இழந்துவிட்டது. அதன் பயனாக, இந்து சமூகம் சிதறுண்டு கிடக்கின்றது. தொழிலும் ஒவ்வொரு சாதிக்கு உரியது என்று கொண்டதல்ல, இந்நாட்டுத் தொழில் முறையும் கெட்டுவிட்டது. தொழில் திறமையைப் பொறுத்ததேயன்றி, ஒரு சாதியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/15&oldid=1371608" இலிருந்து மீள்விக்கப்பட்டது