பக்கம்:தமிழ் இனம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இனம்

19

பொறுத்தது அன்று. இதனால் தொழில் அறிவும், தொழில் திறனும் கெட்டுவிட்டன.[1]

இன்றைய நிலை

ஆங்கிலக் கல்வியினாலும், பிற நாடுகளில் இத்தகைய சாதிகள் இல்லையென்ற உணர்வினாலும், மக்கள் ஒரளவு சிந்திப்பதாலும், முன்னிருந்த சாதிக் கொடுமைகள் ஓரளவு மறைந்து வருகின்றன. தீண்டப்படாத மக்கள் இன்று ஓரளவு முன்னேறியுள்ளனர்.

நாம் செய்ய வேண்டுவன

தமிழினத்தின் உயிர் நாடிக்கே உலைவைக்கும் இச்சாதி வேறுபாடுகள் பிற நாடுகளில் இல்லாமையால், இயற்கையில் உண்டானவை அல்ல. எனவே, இவை செயற்கையில் உண்டானவை என்பது தெளிவு. இவ்வேறுபாடுகள் செய்துள்ள தீமைகள் பல. ஆதலின், இவற்றை இனவாழ்விலிருந்து


  1. “In her caste regulations Hinduism recognised differences and not the mutability, which is the law of life. To avoid collisions among castes she set up boundaries of immovable walls. She thus gave its races peace and order, but not expansion of movement. There fore her Social System lost life and India is worshiping the cage of endless compartments which she had manufactured. It is the same with her trade. Different trades and associations were associated with different castes. In this also Hinduism laid all her emphasis upon the law of heredity, ignoring the law of mutation and thus, reduced arts into crafts and genius into skill.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/16&oldid=1371621" இலிருந்து மீள்விக்கப்பட்டது