பக்கம்:தமிழ் இனம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் பெற்ற தனிச் செல்வம்

25

வந்து, அவர்க்கு மணமுடித்தலும் உண்டு. இத்தகைய வழக்கம் கோயமுத்தூர், திருவாங்கூர், கஞ்சம் முதலிய இடங்களில் உள்ள மலைநாட்டு மக்களிடம் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மணந்துகொண்ட தலைவற்குத் தலைவியைத் தவிரப் பரத்தையர் சிலரிடத்தும் பழக்கம் உண்டு என்று நூல்கள் கூறும். தலைவன் பரத்தையரோடு தொடர்புடையவன் என்பதைத் தலைவி உணர்வாளாயின், அது காரணமாக இருவர்க்கும் ‘ஊடல்’ உண்டாகும். இவர்தம் ஊடலைத் தணிக்கத் தூதர் சிலர் உளர். விருந்தினர் வரவைக்கண்டு தலைவன் தலைவியர் தம்முள் சமாதானம் செய்துகொள்ளலும் உண்டு.

தலைவன் பரத்தையிற் பிரிவதேயன்றிக் கல்வி காரணமாகவும், வேந்தர்க்கு உற்றுழி உதவவும், அறச்சாலைகளைக் காக்கவும், தூதாகப் போவதற்கும் பிரிதல் உண்டு. இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் கால எல்லை உண்டு. பிரிவுக் காலத்தில் தலைவி கற்பொடு பொருந்தி ஆற்றி இருப்பாள். பிரிவு நீடித்த இடத்து அவள் வருந்துதலும் உண்டு. புலவர் இந்த அகவொழுக்கத்தை ‘ஐந்திணை’ யாக்கி விவரிப்பர். ‘திணை’ என்பது ஒழுக்கம். அவ்வொழுக்கம் நிகழும் இடமும் திணை என்னும் பெயராலேயே வழங்கப்படுகிறது. ஐந்திணையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அதற்கு உரியவை. பாலைகுத் தன் நிலம் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் தன் முன்னிலை திரிந்து பாலையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/22&oldid=1371665" இலிருந்து மீள்விக்கப்பட்டது