பக்கம்:தமிழ் இனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ் இனம்

“முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
— சிலப்பதிகாரம்

பிரிதலும், பிரிதல் நிமித்தமும் அதற்கு உரியவை. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை. கணவன் பிரிந்தவிடத்து மனைவி ஆற்றியிருத்தலும், அதன் நிமித்தமும் முல்லைக்கு உரியவை. வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம். ஊடலும் ஊடல் நிமித்தமும் அதற்கு உரியவை. ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறு பொழுது, தெய்வம், மரம், பறவை, உணவு வகை முதலிய பிறவும் இன்ன இன்னவை என நூல்கள் விரித்துக்கூறும். அவற்றின் விரிவைத் ‘தொல்காப்பியம்’, ‘நம்பியகப்பொருள்’ முதலியவற்றில் பரக்கக் காணலாம்.

தமிழர் தனிச்செல்வம்

இவ்வழகு வாய்ந்த அகப்பொருள் தமிழுக்கே உரியது என்பதைப் பற்பல நூலாசிரியர் கூறியவற்றால் அறியலாம். ஆதலின், தமிழ் மொழிக்கே தனிச்சிறப்புத் தரும் இவ்வகப்பொருள் இலக்கண நூல்களையும் அவற்றுக் கியைந்த ‘கோவை’ என்னும் இலக்கிய நூல்களையும் தமிழர் கற்றுப் பெரும் பயன் பெறுவாராக. தஞ்சை வாணன் கோவை, பாண்டிக் கோவை, திருக்கோவை, கலைசைக் கோவை, வெங்கைக் கோவை, கோட்டீச்சரக் கோவை, நெல்லேக்கோவை, பழமலைக் கோவை, அம்பிகாபதிக் கோவை முதலியன அகப்பொருள் இன்பத்தை விளக்கும் இன்ப நூல்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/23&oldid=1371672" இலிருந்து மீள்விக்கப்பட்டது