பக்கம்:தமிழ் இனம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் 29

திருவள்ளுவர் கி. மு. முதல் மூன்று நூற்றாண்டு களுள் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுதலே பொருத்தமாக இருக்கும். மணிமேகலை காவியத்தில், -

“தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யிற் புலவன் பொருளுரை தேருய் ”

எனவரும் அடிகளுள் திருக்குறட்பா ஒன்று இடம் பெற்றிருத்தலைக் காணலாம். மணிமேகலை யின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டாக இருத்தல் வேண்டும் என்பதைப் பல காரணங்களைக் காட்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் நிறுவி யுள்ளார். மருதி என்ற பார்ப்பன மகளை நோக்கிச் சதுக்கப்பூதம் மேற்காட்டப்பெற்ற வரிகளைக் கூறுவ தாகச் சாத்தனர் பாடியுள்ளார். ஒரு சாதாரண பார்ப்பனப் பெண் திருவள்ளுவரின் கருத்தை அறியவில்லையே என்று பூதம் கேட்பதாகப் புலவர் கூறியுள்ளார் எனின், அக்கால மக்களுட் பலர் திருக்குறளின் கருத்தை அறிந்திருந்தனர் என்பது வெளிப்படை. இங்ஙனம் ஒரு நூல் பொதுமக்கள் அறியத்தகும் நிலைக்கு வருதல் அப்பண்டைக் காலத்தில் மிகக்குறுகிய காலத்தில் இயலாது. அச்சு வாகனம் முதலிய வசதிகள் உள்ள இக்காலத்தில், ஒரு நூலின் கருத்துக்கள் விரைவில் சமுதாயத்தில் பரவிவிடும். இவ்வசதியற்ற பழங்காலத்தில் திருக் குறள் கருத்துக்கள் நாட்டிற் பரவக் குறைந்தது ஒன்றிரண்டு நூற்றாண்டேனும் சென்றிருத்தல்

1 Manimekalai in its Historical Setting,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/26&oldid=1356870" இலிருந்து மீள்விக்கப்பட்டது