பக்கம்:தமிழ் இனம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழ் இனம்

வேண்டும். இங்ஙனம் பார்ப்பினும், திருவள்ளுவர் கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டவர் என்று கருதுதல் பொருந்தும்.[1]

நூலாசிரியரும் உரையாசிரியரும்

திருவள்ளுவர் காலம் ஏறத்தாழக் கி. மு. முதல் நூற்றாண்டு என்று வைத்துக்கொள்வோம். இவர் இயற்றிய திருக்குறளுக்கு உரை வகுத்தவர் பலராவர். அவருள் மணக்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் என்பவர் உரைகள் இப்பொழுது கிடைத்துள்ளன. இவற்றுள் மிகச் சிறந்தது பரிமேலழகர் உரை. இவ்வுரையாசிரியர் அனைவரும் கி. பி. 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். பரி மேலழகர் கி. பி. 13-ஆம் நூற்றாண்டினர். எனவே இவர் அனைவரும் திருக்குறளுக்கு ஏறத்தாழ 1000 ஆண்டுகட்குப் பிற்பட்டவராவர். திருக்குறளைப் படிப்பவர் இதனை முதலிற் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். தமக்கு 1000 ஆண்டுகள் முற்பட வாழ்ந்த திருவள்ளுவர் இன்னது கருதியே இக்குறளைச் செய்தனர் என்று அறுதியிட்டுக்கூறுதல் இப் பிற்கால உரையாசிரியர்க்கு இயல்வதன்று. உரையாசிரியர்கள் தாம் கற்ற நூல்களையும் தம்கால சமுதாய வாழ்க்கையையும் உளத்திற்கொண்டு உரை கூறுதல் மனித இயல்பு என்பதையும் திருக்குறளைப் படிப்பவர் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் கொள்ளின், உரையாசிரியர் உரை காண்ப-


  1. திருவள்ளுவர் காலம் பற்றிய ஆராய்ச்சியை இவ்வாசி ரியர் எழுதியுள்ள ‘திருவள்ளுவர் காலம் யாது?’ என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/27&oldid=1356721" இலிருந்து மீள்விக்கப்பட்டது