பக்கம்:தமிழ் இனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் இனம்

தெய்வத்துக்குப் பத்தும், விருந்தினர்க்குப் பத்தும், சுற்றத்தார்க்குப் பத்தும், தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் பத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து வைத்துச் செலவு செய்வதே இல்வாழ்வான் கடமை என்று திருவள்ளுவர் கூறியிருப்பாரா? இல்வாழ்வான் பத்து ரூபாய் கொண்டு குடும்பம் நடத்துதலை இயலுமா? எண்ணிப் பாருங்கள்.

இல்வாழ்பவன் அரசனுக்குச் செலுத்திய வரி போக, எஞ்சிய வருவாயில் தன்னைக் காத்துக் கொண்டு தென்புலத்தார் உள்ளிட்ட நால்வர்க்கும் செய்ய வேண்டும் கடமைகளைச் செய்தலே சிறப்புடையது என்பதன்றோ இத்திருக்குறளின் பொருள்? தன் வருவாயைப் பரிமேலழகர் கூற்றுப்படி செலவிடும் ஒரு மனிதனேனும் இவ்வுலகில் இருத்தல் இயலுமா?

“தென் புலத்தார் – பிதிரர்; பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி. அவர்க்கு இடம் தென்திசை ஆதலின் தென்புலத்தார் என்றார்,” என்பது பரிமேலழகர் விளக்கம். தென்புலத்தார்– தன் குடியில் இறந்த பிதிர்கள்” என்பது காலிங்கர் உரை. இவ்வுரையே பொருத்தமானது. தென்திசை எமதிசையாதலின், நம் குடும்பத்தில் இறந்தவர் தென்திசையில் இருப்பதாகக் கருதித் தென் புலத்தார் எனப்பட்டனர் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. அதனல் படைப்புக் காலத்திலேயே படைக்கப்பட்ட கடவுட் சாதியினராகத் தென்புலத்தார் இருப்பின், அவர்கள் அயனால் காக்கப்படுவர். அவர்கட்கு இல்லறத்தான் செயத்தகுவது ஒன்றுமில்லை, எனவே, இவ்வுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/31&oldid=1356831" இலிருந்து மீள்விக்கப்பட்டது