பக்கம்:தமிழ் இனம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்

39

திரும்பும் மனைவியர் இக்காலத்தில் உண்டு. இச் செயலால் அப்பெண்டிர் தம் இல்லறக் கடமைகளில் ஒரளவு தவறுகின்றனர். இங்ஙனம் கடமை தவறுதலால் நாளடைவில் இல்லறம் நல்லறமாக இயங்க முடிவதில்லை. இக்குறைகளை நன்குணர்ந்த திரு வள்ளுவர் இத்தகைய பெண்கள் தம் சமய முனிவரைத் தொழாமல் கணவனுக்கு உரிய கடமைகளைச் செய்திருத்தல் நலம் என்று கருதியே இக்குறளைச் செய்தார் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. எனவே, இங்குத் தெய்வம் என்பது அவரவர் சமயத்தைச் சார்ந்த துறவிகளையே குறித்ததாதல் வேண்டும் என்று கொள்ளுதலே சிறப்புடையதாகும். அறிஞர் இதனை மேலும் ஆராய்வாராக.

இங்ஙனம் சங்ககாலச் செய்யுட் பொருளையும் அக்காலச் சொல் வழக்காறுகளையும் நன்கு உளத்திற் பதித்துக்கொண்டு, அக்காலத்திலிருந்த சமண பெளத்தம் போன்ற சமய நூற்பொருள்களையும் நன்கு உளங்கொண்டு திருக்குறளுக்கு உரைகாண்பதே கற்றறிந்தார் கடமையாகும். இதனை விரிப்பின் பெருகும்.

வள்ளுவரின் நுண்ணறிவு

இக்கால மாணவன் ‘கிராப்’ வெட்டிக்கொள்வதிலும் அதனைச் சீவி ஒழுங்குபடுத்துவதிலும் எவ்வளவு கவனம் செலுத்துகின்றான் என்பதை நாம் நன்கறிவோம். இவ்வளவு அரும்பாடுபட்டுப் பாதுகாக்கப்படும் தலைமயிரில் இரண்டொன்று எக் காரணம் கொண்டேனும் தான் இருக்கும் இடத்தை விட்டு இறங்கிவிடுமாயின் (விழுந்துவிடுமாயின்),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/36&oldid=1357798" இலிருந்து மீள்விக்கப்பட்டது