40
தமிழ் இனம்
அதனை வளர்த்த மாணவன் அதன் பொருட்டுக் கவலைப்படுவதில்லை; தன்னூல் அதுகாறும் பேணி வளர்க்கப்பட்ட அத்தலைமயிர் விழுந்துவிட்டதே என்று அவன் துக்கம் கொண்டாடுவதும் இல்லை. இஃது ஒரு காட்சி.
நாம் வாழும் தெருவில் நமது மதிப்புக்குரிய பெரியவர் ஒருவர் இருக்கின்றார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; ஆதலின் நமது வணக்கத்திற்கும் பெருமதிப்பிற்க்கும் உரியவராக விளங்குகிறார். அத்தகைய அவர் ஒருநாள் ஒழுக்கக்கேடான ஒரு செயலில் ஈடுபடுகிறார். இதனை நன்குணர்ந்த பிறகு நாம் அவரை முன்மாதிரி மதிக்க மனம் இடந்தருமா? நீங்களே எண்ணிப்பாருங்கள். அதுகாறும் பலரிடம் மதிப்புப்பெற்ற அவர், அப்பலராலும் மிக இழிந்தவராகக் கருதப்படுவர் என்பதில் ஐயமுண்டோ? அதுவரையில் அவர் நலத்தில் கவலைகொண்ட மக்கள், அச்செயலுக்குப்பின் அவரைப் புறக்கணிப்பர் அல்லவா? இது மற்றாெரு காட்சி.
மனிதன் தனக்குரிய நல்லொழுக்க நெறியிலிருந்து தவறுவானாயின் தலையிலிருந்து விழும் மயிருக்குச் சமமாகக் கருதப்படுவான் என்பது இவ் விரண்டு காட்சிகளின் திரண்ட பொருளாகும்.
இவ்விரண்டு காட்சிகளையும் கருத்திற் கொண்டே திருவள்ளுவர்,
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்தம்
நிலையின் இழிந்தக் கடை”
என்னும் குறட்பாவைப் பாடியருளினர். இஃது எவ்வளவு உயர்ந்த கருத்தினைப் புலப்படுத்துகின்-