பக்கம்:தமிழ் இனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்தினை அமுதம்

43

குறிஞ்சிநிலக் கூட்டுறவு

ஒருவனும் ஒருத்தியும் முதன்முறை ஒருவரை ஒருவர் கண்ட ஞான்றே கொள்ளும் அன்பும், அவ்வன்பின் பெருக்கால் உண்டாகும் கூட்டுறவும், அக்கூட்டுறவு பலநாள் தொடர்புற்றுக் களவில் நடப்பதும் களவு எனப்படும். இதனைக் குறிஞ்சி நில ஒழுகலாருக முன்னையோர் வகுத்தனர். தலைவனும் தலைவியும் உயிர் ஒன்றும் உடல் இரண்டுமாகக் களவில் வதிவர். தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னர் ஒருவிதத் தொடர்பும் இல்லை ; அவன் பெற்றாேர்க்கும் அவள் பெற்றாேர்க்கும் எட்டுணையும் தொடர்பில்லை : ஒருவரை ஒருவர் பார்த்தும் அறி யார்; இந்த நிலையில், இருவர்தம் உள்ளமும் ஒன்றா யின. இதுவே குறிஞ்சிநிலக் கூட்டுறவு . இதனை,

"யாயும் ஞாயும் யாரா கியரோ ?
எந்தையிம் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே".

-குறுந்தொகை, 40

என்னும் தலைவனது கூற்றால் உள்ளவாறு உணரலாம். மேலும்,

"கொடுப்பினன் குடைமையும் குடிநிரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணா(து)
எமியேந் துணிந்த ஏமஞ்சால் அருவினை".

-குறிஞ்சிப்பாட்டு, 30-32

என்னும் அடிகளாலும், உயிர்க்குப் “ பாதுகாவலாகிய அருவினை " என்றே பண்டைத் தமிழர் தம் களவு ஒழுக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது இனிது புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/40&oldid=1507209" இலிருந்து மீள்விக்கப்பட்டது