பக்கம்:தாயுமானவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

旁 குருவருள் பெற்றமை 3, 9 & ஞான உபதேசம் செய்து வந்தனர். தாயுமானவர் លទ្ធំ காலத்தில் அவ்வகையில் தருமபுர ஆதீனத்தில் உபதேசம் பெற்ற மெளனகுரு தேசிகர் என்னும் சிவயோகியார் திதம்பு தத்தினின்றும் புறப்பட்டுப் பல திருத்தலங்களையும் சேவித் துக் கொண்டு திருச்சிராப்பள்ளியில் சாரமாமுனிவர் திருமடத் தில் தங்கியிருந்தார். இங்கு அவர் பலருக்கு மெய்ந்நூல் அறிவுறுத்தினமையால் இவ்விடம் மெளனகுரு மடம்' எனறு பெயரும் வழங்கலாயிற்று. இவரே 17-வது பட்டமாக எழுந் தருளியிருந்த மெளனகுரு சுவாமிகள். பின்னர் 17-வது பட்டம் மெளன குருசுவாமிகள் தருமை யாதீனத்திற்குச் சென்று அந்த மெளன. மடத்தின் பரிபால னத்தை தருமையாதீன மடாலயத்தின் நிர்வாகத்தில் ஒப்ப டைத்துவிட்டுப் பூரிபூர்ணம் அடைந்தார். அன்றிருந்து தரு மையாதீனத்திலிருந்த முனிவர் குழாத்துள் ஒருவரே திருச்சி சாப்பள்ளி மெளன மடத்துக்குக் கட்டளை விசாரணைத் தம்பிரானாக அமர்த்தப் பெற்றனர். அன்று முதல் சற்றேறக் குறைய நானூறு ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை மெளன மடம் தருமையாதீனத்தின் பரிபாலனத்துக்கு உட் பட்டதாய் இருந்து வருகின்றது. குருவருள்: மெளனகுரு சுவாமிகள் இங்ங்னமே அங்கி ருக்கும் நாளில் ஒருநாள் தாயுமானவர் தாம் மேற்கொண்ட வழக்கப்படி சிராப்பள்ளி மேயானை வழிபட்ட பின்னர் சாரமாமுனிவர் மடத்தருகேயுள்ள குமாரக் கடவுளை வணங்கி மீளும்போது மெளன குரு சுவாமிகள் எதிர்ப்பட்ட னர். சுவாமிகளைக் கண்டவுடன் உள்ளங் கவரப்பெற்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். தாயுமானவரின் உயர்ந்த பக்குவ நிலையை அறிந்த மெளனகுரு சுவாமிகள் அவரைத் தம் அடியவராக ஏற்று விசேட திக்கை செய்வித்து சிவபூசை எழுந்தருள்வித்துக் கொடுத்தருளினர். அதன் பின் னர் கல்வியின் கரைகண்ட தாயுமானவர் வேதாந்த நூல்களி லும் பிற சமய நூல்களிலும் தமக்கிருந்த ஐயங்களைக் குரு மூர்த்தி மூலம் தக்க சுருதி யுக்தி, அநுபவங்களால் போக்கிக் கொண்டார். பின்னர் சுவாமிகள் அவருக்கு யோகஞான முறைகளையும் உபதேசித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/29&oldid=892296" இலிருந்து மீள்விக்கப்பட்டது