பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாவரம்-வாழ்வும் வரலாறும் ராபர்ட் ஹாக் எழுதிய படத்தோற்றம் .|تائے LD -الا (உயிரணுச் சிற்றறைகள்) புரொட்டோப்பிளாசத்தாலாகிய உயிரணுவினுள்ளே உட்கரு, உயிர்த்தாது, கணிகங்கள் (plastids) ஆகிய மூன்று வகையான உயிர்ப் பொருள்கள் காணப்படுகின்றன. அன்றி, சர்க்கரைப் பொருள் களும் கொழுப்புகளும், சில உப்புகளும், உட்கரு அமிலங்களும், புரோட்டீன்களும் உள்ளன. இவையெல்லாவற்றையும் சேர்த்துப் புரோட்டோப்பிளாசம் என்பர். இவற்றில் உட்கருவைமட்டும் நீக்கி எஞ்சியவற்றை உயிர்த்தாது (cytoplasm) என்பர். இதில் வியக்கத் தக்கது யாதெனில், தாவர உயிரணுவும் விலங்கு உயிரணுவும் இவ் வமைப்பில் ஒரே மாதிரியாக இருப்பதேயாகும். எவ்வளவு பெரிய விலங்காயினும் சரி, எவ்வளவு சிறிய தாவரமாயினும் சரி, உப்பு நீரில் வாழ்வனவும் சரி, நன்னிரில் வாழ்வனவும் சரி, இவ் வுலகத் தில் எவ்விடத்தில் வாழ்வனவாக இருப்பினும், இருவகையான உயிரணுக்களில் வேறுபாடு பெரிதும் இல்லே. உயிரணுப் பகுப் பிலும் வளர்ச்சியிலும்கூடத் தாவர உயிரணுக்கள் விலங்குயிரணுக் களுடன் ஒத்துள. இவ் வுண்மையை 1838ஆம் ஆண்டில் விடிலெய்டன் (Schleiden), விடிவான் (Schwann) என்ற ஜெர்மன் நாட்டறிஞர்கள் உயிரணுக் கொள்கை' (Cell Theory) என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -(குறள்-972)