உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

கற்றாள் தொழாஅர் எனின். (ப-ரை) வால் அறிவன் . மெய்யுணர்வினை உடைய வனது, நல்தாள் - நல்ல அடிகளை, தொழாஅர் - தொழ வில்லை, எனின்.என்றால்: கற்றதனால்.நூல்கள் பல கற்ற தனால், ஆய - உண்டான பயன் - பயனாவது, என் - யாது? (க-ரை எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால், தூய அறிவினன்-மெய்யுணர்வினன்-ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.

3. மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

(ப-ரை மலர் மிசை-நெஞ்சமாகிய மலரில், ஏகின்ான். சென்றவனது, மாண் - சிறப்பான, அடி - அடிகளை, சேர்ந்தார் . இடைவிடாது நினைப்பவர்கள், நிலமிசை . உலகத்தில், நீடு - நிலைத்த பெருமையுடன், வாழ்வார் . வாழ்வார்கள்.

(கரை) உள்ளக் கமலத்தில்-மனத்தில்-சென்றிருப் பவனான, இறைவனுடைய மாட்சிமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள், உ ல கி ல் அழிவின்றி வாழ்வார்கள்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

(ப-ரை வேண்டுதல் - விரும்புதலும், வேண்டாமை - வெறுத்தலும், இலான் அடி - இல்லாதவனுடைய அடிகளை, சேர்ந்தார்க்கு - எப்போதும் நி ைன ப் ப வ ரீ க ளு க் கு, யாண்டும் - எக்காலத்திலும், இடும்பை . துன்பங்கள், இல . இல்லாமற்போகும்.

(க-ரை விருப்பும் வெறுப்பும் இல்லாதவனான இறைவ

னின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எக் காலத்திலும் துன்பமே உண்டாகாது.