உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

(க-ரை) தணக்கு ஈடாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாதவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங். களை நீக்க முடியாது.

8. அறஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்(கு) அல்லால்

பிற ஆழி நீங்தல் அரிது.

(ப-ரை) அற ஆழி - அறக்கடல் ஆகிய, அந்தணன் - இறைவனது, தாள் சேர்ந்தார்க்கு - அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அல்லால் - அல்லாமல் (மற்றவர். களுக்கு பிறஆழி - ஏனைய பொருள், இன்பம் என்னும் கடல்களை, நீந்தல் அரிது-நீந்திக் கடத்தல் முடியாது.

(க-ரை: அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெப்பத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக் குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.

9. கோள்இல் பொறியின் குணம்இலவே எண்குணத்

தாளை வணங்காத் தலை. (தான்

(ப.ரை) கோள் - கொள்ளுதல், இல் - இல்லாத பொறியின் - ஐம்பொறிகள் போல, குணம் இலவே - பயன் படுவன அல்ல, எவையென்றால்) எண்குணத்தான் - சிந்தித்து உணர்தற்கு எளிமையான குணங்களையுடை யவனது, தாள் - அடிகளை, வணங்காத் தலை வணங்காத். தலைகள் .

(க-ரை) தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறி களைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங் களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுதலுடையன அல்லவாம்.