உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அட்டவீரச் செயல் (2) ΜΕi (5) புரம் எரித்தது (2-5) திரிபுராதிகளின் கொடுமையை ஆற்ருத தேவர்கள், பெருமானுடைய அடிபணிந்து அரற்ற முப்புரங்களும் ஒரம்பால் அழியும்படி வில்லை வ8ளத்துத் தீயினுக்கு இசையாக்கினர் பெருமான். புரம் :-மதில் மூன்று கொண்டின முப்புரங்கள். சிவபிரான் ஏறிய தேர் :-வேதங்களே தேரில் பூட்டப் பட்ட குதிரைகள் ஆதலின் தேர் வைதிகத் தேர்" எனப்பட்டது. தேர்ச்சாரதி பிரமன் வில் :-மேருவாகிய பொன்மலை. வில்லின் நாண் :-பாம்பு. திரிபுராதிகள்:-முப்புரங்கள் தீயில்ை எரிக்கப்பட்ட போது அப்புரங்களில் இருந்த அசுரர் யாவரும் எரிபட்டு அழிந்தார்கள். ஆயினும் அவ்வசுரர்களில் மூவர்மீது அவர் கம் பக்திக்காகக் கருணைபுரிந்தார் இறைவர். ' (8) பிரமன் சிரத்தைக் கொய்தது (2-6) அகந்தை கொண்ட பிரமனுடைய தலையைக் கொய் தனர் பெருமான். (7) யானையை அட்டது (2-7) தம்மைக் கொல்லும்படி (தாருகாவனத்து முனிவர்கள்) ஏவின யானையின தோலே உரித்துப் போர்வையாகப் பூண் டனர். அங்கனம் உரித்தபோது பார்வதியை அஞ்சும்படி செய்தனர் பெருமான்.

  • மூவரில் இருவர் தமது கோயில் வாயில் காப்பவராகவும், ஒருவர் கோயிலில் மணிமுழா மு முக்கவும் அருள் புரிந்தார் இறைவர். -சுங்தார். தேவாரம் 55–8