உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பதிப்புரை

 என்று திருக்கோவையார் முகவுரையில் எழுதியபடி, தணிகை மணி ஐயா அவர்கள் விருப்பத்தை அவசிகள் வழிபடு தணிகைப்பெருமான் கிறைவேற்றியருளிஞன் என்பது வியங்து மகிழ்தற்குரியது. L

25-8-1971 இல் தணிகைமணி ஐயா அவர்கள் இறையடி சேரவே, திருவிசைப்பா ஒளிநெறி முதற்கண் அச்சிடப்பெற்று 1972 நவம்பர்த் திங்களில் கழகவழி வெளியிடப்பெற்றது. இப்போது ஒளிநெறிக் கட்டுரைகள் அச்சிடப்பெற்று முடிவு பெறுவது தணிகைப்பெருமான் தண்ணிளியினலேயேயாகும். ஒன்பது திருமுறைகட்கு எழுதப்பெற்ற ஒளிகெறிகளும், ஒளிநெறிக் கட்டுரைகளும் தமிழ் இலக்கியங்கள், சமய இலக் கியங்கள் ஆகியவற்றில் தணிகை மணியவர்கட்கிருந்த பெரும் புலமையினையும் எண்ணிய எண்ணியாங்கு செய்து முடிக்கும் மனத்திண்மையையும் ஒப்பில் பெரும் முயற்சியினையும் ான்கெடுத்து விளக்குவனவாம்.

1969இல் ஐயா அவர்களின் தமிழ்ப் பெருங்கொண்டினேப் பாராட்டி மதுறைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இத்தகைய தொண்டைச் செய்தவர்க்கு மேட்ை டின் ராயின்,நோபல் பரிசு வழங்கியிருப்பர் என்பது திண்ணம்.

ஒன்பது திருமுறைகட்கும் எழுதப்பெற்றுள்ள ஒளிநெறி, ஒளிநெறிக் கட்டுரை நூல்களேயெல்லாம் வாங்கிப் போற்றிக் கழகப் பதிப்புத் தொண்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் படி சைவத் திருமடங்களேயும், தமிழ்ப்புலவர் பெருமக்களையும், நாலகத் தலைவர்களையும் வேண்டிக்கொள்கிருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.