பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மு. பரமசிவம் :

இதழ்களில் விஷயதானம் செய்தவரான கோவிந்தன் வி.ஜி. என்னும் பெயரில் கல்கி இதழில் பாப்பாமலர்' பகுதிக்குக் கதைகள் எழுதினார்.

1943இல் பேராசிரியர் 'கல்கி அவர்களால் 'விந்தன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கல்கி ஆசிரியர் குழுவில் துணையாசிரியராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

முதல் தாரம்? முதல் திருமணம்?

1944இல் பாட்டனாரைப் போல, தந்தையைப் போல, சரஸ்வதி என்னும் பெண்மணியை 13.7.1944 அன்று, இரண்டாம் தாரமாக மணந்தார்.

1946இல் விந்தன் எழுதிய முல்லைக்கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியது தமிழ் வளர்ச்சிக் கழகம்.

1948இல் முருகு சுப்பிரமணியம் நடத்திய 'பொன்னி இதழில் நக்கீரன் என்ற பெயரில் 'கண் திறக்குமா?" என்ற நாவலை எழுதினார்.

1950இல் 'கண் திறக்குமா? என்ற நாவலை அளித்து மக்களின் பாராட்டைப்பெற்ற விந்தன் கல்கி' கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கல்கி'யில் 'பாலும் பாவையும் கதைத் தொடரை எழுதினார்.

1951இல் 'கல்கி பத்திரிகையிலிருந்து விலகி ஏவி.எம்.மின் கதைக் குழுவில் சேர்ந்தார். டாக்டர் மு. வரதராசனார் முன்னுரையுடன் ஒரே உரிமை என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.