உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தீபம் யுகம் புதுமையும், நயமும் பெறுவதில் போட்டி போட்டு வெற்றியடைய முயல்வதற்குப் பதில் தரக்குறைவில் போட்டிபோடும் மனப்பான்மை யைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். தமிழ் எழுத்தாளர்களிடையே இதைப் பற்றி ஒரு தார்மீகக் கோபமும் கவலையும் கூட இல்லை. படைப்பாளிகளின் எழுத்து நிரம்ப வேண்டிய பக்கங்கள் ஒவ்வொன் றாகப் பறி போகின்றன. படைப்பாளிகளிடையே இனவுணர்ச்சியும் தன்மானமும், தொழிற் செருக்கும் உள்ளவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடு பட முன் வர வேண்டும். அப்படிப் பாடுபடும் பலம் வாய்ந்த இலக் கிய அமைப்புக்களும் இங்கே உருப்படியாக இல்லை. ஒவ்வொரு பிரபல பத்திரிகையும் தனக்கென்று தரமும் நயமும் வாய்ந்த தனித்தன்மை ஒன்றைப் பேணாமல், முன்னால் ஒடும் ஏதோ ஒரு பத்திரிகையையே இமிடேட் செய்ய முயல்வது தெரிகிறது. ஒருவருக்குப் பின்னால் ஒடுவதால், அந்த ஒருவர் தான் மேலும் மேலும் முன்னால் ஒட வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவரும் ஒரு நல்ல புதுப்பாதை வகுக்க முடியும். அப்படி முடியும் போது ஒரே பாதையில் பின்னால் ஓடுவதால் பயன் என்ன? தமிழ் எழுத்தாளர்க ளும் வாசகர்களும் இதை இந்த நேரத்தில் நன்றாகச் சிந்திக்க வேண் டும். புதுப்புதுப் பாதைகளை ஏற்கும் மனப்பாங்கு வாசகர்களுக்கும் வர வேண்டும்." (ஜூலை 1969) இலக்கிய வளர்ச்சி குறித்தும், எழுத்தாளர்களின் நலன்கள் குறித் தும் தீபம் இடையறாது சிந்தித்து வந்தது. பத்திரிகைகளின் வணிக நோக்கு, சினிமாவால் ஏற்படும் சீரழிவுகள், தமிழ்ச் சமூகத்தின் நிலைமை, இவற்றால் இலக்கியம் பெறும் பாதிப்புகள் பற்றி எல்லாம் தலையங்கங்கள் சிந்தனை ஒளி பரப்பின. உற்சாகம் தராத நிகழ்கா லம் எதிர்காலம் பற்றி கவலை கொள்ள வைக்கிறது. - இது குறித்த ஒரு தலையங்கம் (கவலை தரும் எதிர்காலம்) நிளைவுகூரப் பட வேண்டியது ஆகும் - - "தீபமும், தீபத்தை ஒத்த நோக்கமுள்ள சகோதரப் பத்திரிகைக ளும், இலக்கியக் கூட்டங்களை முறையாக நடத்தும் சங்கங்களும் நாட்டில் இலக்கியப் பிரக்ஞையை உருவாக்குவதற்குப் பாடுபட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/45&oldid=923239" இலிருந்து மீள்விக்கப்பட்டது