உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீட்டிற் பகை ஏரிநீர் இல்லை! இருண்ட மலேநிறைந்த ஊரின் ஒதுக்கில் உயர்ந்த மலேச்சாரல் இழிந்துவரு ஒடை இடைமறித்துத் தேக்கி, வழிந்து வருநீரை வாய்க்கால் வழிப்படுத்தி, நன்செய் பயிர்செய்து நற்குடிசை ஒம்பியும், புன்செய் விளேத்துப் புறந்தந்தார் போற்றியும் வாழ்ந்து வருமேழை, வயலைப் பலநாளாய் மேய்ந்துபா ழாக்கும் எருமை பிடிக்க இரவில் தனியே எழுந்திருந்து போனுன் ; அரவுவாழ் புற்றும், அடர்ந்த புதரும் நிறைமனத்தைச் சற்று நிலைகுலைக்க, வானில் மறைநிலவு கண்டான்; மனஞ்சோர்ந்தான்; என்ருலும், வாடிக்கை யொற்றை வழிப்பாட்டை கைக்கோலால் தேடி நடந்தான் ; செறிந்த மலைக்காட்டில் மூடி யிருந்த முகிலேக் கொடுங்காற்று சாடிக் கலைக்கத், தலைமேல் திரண்ட கருமேகக் கூட்டம் பரந்து கவிழ்ந்தே உரும, விழியைப் பறிக்க ஒளிமின்னப் பாசி நனிபடர்ந்த பாழ்குட்டை ஓரத்தே வீசுங் கொடுங்காற்றில் மெய்பொத்தி நின்றிருந்தான். 22