உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயையோ!' என்றே அலறும் பெருங்கூச்சல் மைபோர்த்த குன்றின் மருங்கும் எதிரொலிக்கச் செய்வ தறியான் திகைத்தான் சிறுநேரம் ; கைத்தடியைக் கீழுன்றிக் காலால் இடமறிந்தான்; ஒடின்ை ; நீள்குன்ற ஒரத்துக் குட்டையிலே ஆடி யலேயும் அழகுக் கொடிபோலக் கன்னிப் பருவத்துக் கட்டழகி ஒர்நல்லாள் சென்னிவரை மூழ்கித் திணறும் ஒலிகேட்டான் ; பாய்ந்து குதித்தோடிப் பாவை உயிர்மீட்டான் ; காய்ந்த சருகாற் கடுங்குளிரைப் போக்கினன் வெள்ளி யெழும்ப, விடியல் தொடரப், புள்ளிக் குயில்கூவப், பூக்கள் தளையவிழத், தென்றல் தவழச், சிறுபுட்கள் தாலாட்டக், குன்றத்து மெல்லருவி கொட்டு முழவார்க்க, மேல்வான் இருள் நழுவ, விண்மீன் ஒளியிழப்ப மாலூட்டும் கீழ்வான் மருங்கெல்லாம் செவ்வரிகள் இட்டு மெருகேற்றி இல்லாத வண்ணமெலாம் பட்டெரிக்கும் வானப் பரிதி இளஞ்சுடரிற் பெண்ணுள் முகமாம். பெரும்பொய்கைத் தாமரையைக் கண்ணுற் சுவைத்திருந்தான்! கன்னியும் கண்விழித்தாள தோகை யடிபட்டுச் சோர்ந்து கிடப்பதைப்போல் தோகை ப்டுத்திருந்தாள் ; சோர்ந்த இருவிழிகள் மால மலர்போல் வளமற் றிருந்தனவே! மாலை இழந்தமுகம் காலே வருமதியாம் தாய்மை நிலையைச் சரிந்த இடைகாட்ட ஆாய்திறந்தே, என்ன மாளவிடு மென்ருள் ; தேம்பி யழுதாள்; திசையெல்லாம் நோக்கிள்ை! 33