உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தேசியத் தலைவர் காமராஜர் இந்தத் தமிழறிஞர்களின் ஆங்கில அறிவு, ஆற்றல் மிக்க ஆண்மைகள், திறமைகள், உழைப்புகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டன: தமிழர் ஒருவர் தலைமையில் கூடிய நாகபுரி மகாசபையில்தான், மாநிலங்களை மொழிவாரியாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. தீர்மானமாக! இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை வழி நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பு காந்தியடிகளுக்கு ஏற்பட்டதே, திரு. விஜயராகவாச்சாரியார் தலைமையில் கூடிய மகா சபையில்தான் என்பதை எண்ணும் போது, தமிழன் என்று சொல் லடா - தலைநிமிர்ந்து நில்லடா என்ற பெருமையை ஏற்படுத்தியவர் சேலம் சி. விஜயராகவாச்சாரியாரே ஆவார்: தனிமனிதர் தயாரித்த அரசியல் சட்டம்! டாக்டர் அம்பேத்கார்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிதாமகன் என்று நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படுகின்றது. ஊருக்கு ஊர் அதற்காகச் சிலைகளும் அமைக்கப்படுகின்றன: அவர், தனிமனிதனாக நின்று தனது சட்ட வித்தகத்தை நாட்டினாரா என்றால் இல்லை; அவர் தலைமையின் கீழ் ஒரு சட்ட நிபுணர்களின் குழுவே பணியாற்றியது திரு. இலார்டு பிர்கென் ஹஅட் என்ற ஆங்கிலேய அதிகாரி, 'இந்தியர்களால் ஒர் அரசியல் சாசனம் தயாரிக்க முடியுமா?’ என்று ஒரு சவால் விட்டார். டெல்லி மத்திய சட்டமன்றத்தில்! ஆங்கிலேயரின் அந்த ஆணவச் சவாலை அரசியல் மானத்தோடு ஏற்று, 1927-ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு முதன்முதலாக . ஆனால், தனி ஒரு மனிதனாக நின்று அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை தயார் செய்து கொடுத்தவர். இந்த நாகபுரி மாநாட்டின் தலைமையேற்ற முதல்தமிழ் மகனானசேலம் திரு. சி. விஜயராகவாச்சாரியார்தான். அத்தகைய ஒரு மாமேதையை இன்று யாருக்குத் தெரியும்? அவராற்றிய அரசியல் அற்புதம் எவருக்குப் புரியும்? இந்திய நாடு விடுதலையடைந்த பிறகு அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு திரு.விஜயராகவாச்சாரியார் எழுதிய அரசியல் சட்டம் ஓர் அடிப்படையாகவே அமைந்தது. இந்தியாவிலே உள்ள அரசியல் கட்சிகளை எல்லாம் ஒன்று படுத்தி, விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திட