பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தேசிய இலக்கியம் களின் வழிபாட்டு முதல் ஆயர் குலத்தாரின் திருமால் வழிபாடு வரை) வழிபாட்டு முறைகளும் பேசப் பெறுகின்றன. அடுத்துத் தோன்றிய மணிமேகலை பெளத்த சமயத்தைப் பரப்பவே எழுந்த நூலாகும். கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டினது என்று கருதப்படும் உதயணன் கதையாகிய கொங்குவேள் மாக்கதை முதலும் இறுதியும் கறையான் உண்ட நிலையில்தான் இன்று கிடைத்துள்ளது. எனினும், இடையில் காணப்படும் குறிப்புகளில் பல சைன சமயக் கருத்துகளை வெளியிடுகின்றன. இதன் பிறகு, ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றிய இலக்கியங்கள் அனைத்தும் சமய இலக்கியங் களே. தேவாரம்', 'திருவாசகம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம். திருடிந்திரம்', 'திருவிசைப்பா", "திருப்பல்லாண்டு ஆகிய இவைகளே இம் மு ன்று நூற்றாண்டுகளிலும் தோன்றிய நூல்கள். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பன் காப்பியமும் பத்தாம் நூற்றாண்டில் சிந்தாமணியும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியபுராணம் எனப்பெறும் திருத்தொண்டர் புராணமும் தோன்றின. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று சிலராலும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று சிலராலும் கூறப்பெறுகிற இரண்டில் ஒரு காலத்தில் காப்பியங்களின் முடிமணியாகிய கம்பராமாயணம் தோன்றிற்று. இந்த நூல் களுள் எவை சமயச் சம்பந்தம் இல்லாதவை? கி.பி. பன்னிரண் டாம் நூற்றாண்டின் பின்னர் நேற்று வரை தோன்றிய நூல்கள் எண்ணிறந்தன. ஆன்ால், அவற்றுள் பல புற்றீசல் வாழ்வுடையன. பிறந்த உடனேயே இறந்தவை பல. சில ஆண்டுகளில் இறந்தன. சில. ஆனால், காலத்தை வென்று எஞ்சிய ஆசிரியர்களில் குமர குருபரரும் சிவப்பிரகாசரும் - சிறந்தவர்கள். இவ்விருவருமே சமய இலக்கியங்கள் செய்த வர்கள். - - இவ்விடைக் காலத்தில் தோன்றிய ஸ்தல புராணம், 'உலா', 'பிள்ளைத் தமிழ் தூது கலம்பகம். குறவஞ்சி.