உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் பு ைர

தேவார ஒளிநெறி' எனப்படும் திருமுறை விணக்கப் பெரு நூல்-திருவருள் நூல்-திருவாளர், தணிகைமணி, ராவ் ப்கத்ார், வ. சு.செங்கல்வாய பிள்ளை, எம். எ., அவர்களால் சிவினருள் துணைகொண்டு யாக்கப்பெற்றது.

அவர்கள் சிறிதேறக்குறைய இருபதாண்டுகளுக்கு மேல்ாக ஒல்லும்வகை ஒவாது தொடர்ந்து செய்து கொண்டுவரும் அரு ள்ள்ராய்ச்சியின் மூவாத் திருப்பணியின் பயனய்த் திகழ்வது இந்நூல். இந்நூலின் துணைகொண்டு தேவார்த்தின்கண் செங் தமிழ் அருள்ாசிரிய நாயன்மாரால் தான் அவனந்தன்மையில் ' ' என்துரை தனதுரையாக என்னும் செந்நெறி முறையில் ஆக்கியருள்ப் பெற்ற திருமுறைத் தீர்தேனைச் சிவமணம் பெருகப் பருகி இன்புற்று இனிது வாழலாம். - - இந்நூலில் தேவாரத்தின்கண் வழங்கியருளும் சொல்லும் பொருளும், வழக்குகளும், ஒப்புமைப் பகுதிகளும், ஒருசொல் தேவாரப் பதிகங்களில் எத்தனை இடங்களில் ஆளப்பட்டிருக் கின்றன என்பதும் பிறவும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக் கின்றது. மேலும் ஆண்டவன் திருவருட் செயல்களும், அடியார் திருத்தொண்டும், பேறும், திரு ஆர்களின் சிறப்பும், திரு வரலாறுகளும் அகரவரிசை முறையில் எளிதாக உணர்ந்து உவந்து உய்யும்படி அமைந்துள்ளன.

தேவாரத்தில் ஆண்டருளப்பெற்ற சொல்லும், பொருளும், கருத்துக்களும், தொடர்களும் எடுத்தாளப் பெற்றுள்ள செங் தமிழ்ப் பேராசிரியர் பெரு நூல் பலவும் குறிக்கப்பெற்றுள்ளன.

முதற் பகுதியாக 1946-இல் ஆளுடையபிள்ளையாரின் -

ஞானசம்பந்தப் பெருமானின் திருமுறையின் ஆய்ந்து தொகுத்த 466 தலைப்புகளில் 100 தலைப்புகள் (அ-சி) ஆசிரிய ரவர்சள்ாலேயே அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ள்து. இப் பொழுது கம் கழக வழியாக 101 முதல் 265 (சி-தெ) வரை ஒரு நூற்று அறுபத்தைந்து தலைப்புகள் வெளிவருகின்றன. ஏனையவும் விரைந்து வெளிவரும்.

இதுபோலவே அவர்கள் ஆய்ந்து எழுதிவைத்திருக்கும்

ஆளுடைய அரசு-திருநாவுக்கரசு நாயனர் திருப்பகுதியும் தொடர்ந்து வெளிவரும்.