உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இனி எழுதவேண்டிய ஆளுடைநம்பி-சுந்தாமூர்த்திநாயனர் திருமுறை ஆய்வுகளும் எழுதிச் சைவவுலகத்துக்குப் பயன் ப்ெறிச் செய்யுமாறு அம்மையப்பர் இந்நூலாசிரியர்க்கு எல்லா நலங்களுடன் மீண்ட வாழ்நாள் அருள்வாராக.

நூலாக்கலினும் நூலுக்குரைசெய்தல்- அருமை. உரை செய்தலினும் மொழிபெயர்த்தல் அருமை. மொழிபெயர்ப்பினும் ஒரு நூலின்கண் உள்ள பல்வேறு பகுதிகளைத் துருவித்துருவி ஆராய்ந்து ஆய்வு நூல் அமைத்தல் அருமை. ஆய்வு தாலினும் இந்நூல் அமைப்புப்போல் ஒருசொல் எத்தன்ை இடங்களில் ந்ெதுள்ளதெனவும், ஒரு பொருளைப்பற்றி எத்தனை வகையான கருத்துக்கள் அமைய எத்தனை இடங்களில் பெய்துரைக்கப்பட் டிருக்கின்றன என்பதும், நாடு, நகர், ஊர், பேரூர், யாறு, குளம், க-வல், வ்ரலாறு, அருளிப்பாடு முதலிய பல பொருள்களைப் பற்றிய தெளிவுரைகளும் பல்லாண்டு பல்லாண்டுகளாக ஆய்ந்து தொகுத்து நெறிப்படுத்தி ஒண்மையுற ஒளிநெறி நூல் ஒன்று அம்ைத்துத் தருவது அருமையினும் அருமை. ஆல்ஆண்மை இந் நூலினை நடுகின்று நோக்குவார் யாவர்க்கும் தெள்ளிதிற் புலம்ை.

இச்செயற்கருஞ்செயலைச் செய்தற்குப் பல்லாற்ருனும் தகுதியுடையார் இந்து லாசிரியரவர்களே யாவர். இவர்கள் பன்மொழிப்புலமையும், பன்னூலறிவும் ஒருங்கு வாய்ந்த நன்மையர். எல்லையற்ற பொறுமைக்கோர் எல்லையாய் விளங்கு பவர். உலகியற் பொருள் நோக்காது திருவருள் நோக்கென்றே கொண்டு செய்து வரும் திருத்தொண்டினர். அவர்கட்குக் கழகத் தார் நன்றி என்றும் உரித்தாகுக.

அரசியலாரும் திருமடத்தாரும் ந்ேதமிழ்ச்செல்வரும் இதன் அருமை பெருமைகள்ை உள்ளவாறுணர்ந்து நர்லாசிரியரையும் பதிப்பாளரையும் போற்றுவார்களானல் ஆது, இதன் தொடர் பான மற்றப் பகுதிகள் விரைந்து வெளிவருவதற்குப் பெருங் துணைபுரிவதாகும்.

செந்நெறிச் செல்வர்களும் செந்தமிழ் அன்பர்களும் கிரு நெறிய தமிழாம் தேவாரக்கரு ஆலமாகிய இந்நூலை வாங்கியும், வாங்குவித்தும், கற்றும், கற்பித்தும் கற்றிறம் படர்ந்து நல் லின்பம் எய்தி வாழ்வார்களாக. --- o

சைவசித்தாந்த நூற்புதிப்புக் கழகத்தார்.