உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10- தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 10. அரசர், ஆட்சி (9) { பொது o 1. திருச்சுழியற் பெருமானை வழிபடும் அடியார் களின் திருவடியைத் தொழுபவர் திசை மன்னராய் திரு நீங்காது அரசாளுவர். s: 2. புலவர்களே திருப்புகலூரைப் பாடுவீர்களாக; நீங்கள் தேவலோகத்தை ஆள்வீர்கள் ; இதில் ஐயப்பாடு ஒன்றுமில்லை. - - * 3. அரசுபுரிந்த பல்லவர்க்குத் திறைகொடாத "மன்ன வருக்குக் கலக்கந் தந்த பெருமை வாய்ந்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். 4. பல்லவர்களுடைய ஆட்சித் தலைநகர் காஞ்சிமா மாநகரம். - 5. ஆரூாருடைய பாடல்களைப் பாடவல்லவர் மண்டல நாயகராய் வாழ்வர் என்பது கிச்சயம். அவர்கள் யானே மன்னவராகி விண்ணுலகை ஆள்வார்கள். 6. யானைமேல் ஏறிவரும் மன்னர்களே ! நீங்கள் செத்தபோது உங்களுக்குத் துணை யாருமில்லை என்பதைச் சிந்தையிற் கொள்ளுங்கள். 7. எண்ணிறந்த மன்னர் இறைவனே எங்கும் ஏத்துவர். 8. திருப்பரங்குன்றத்தில் சேர, சோழ, பாண்டி யர்களாம் மூவேந்தர்களின் முன்னிலையில் ஆரூரர் பாடின பதிகத்தைக் கற்று வல்லவர் வானேர்க்குத் தலைவாய் விண் முழுதாளுவர். 9. வேந்தராய் உலகாண்ட அரசருடைய உடலும் துயர்க்கிடமாகி அழிவுறும். இப் பொய்வாழ்க்கையை நெஞ்சே, நீ விட்டொழிப்பாயாக. —r இதன் விவாம் நாயன்மார்’ என்னும் தலைப்பு 178-3 (1)-ல் பார்க்க.