உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器给 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

உபதேச முறையில் அமைந்த பாடல்கள் மூன்று. இம் மூன்று குறுந்தொகைகளிலும் முறையே * கச்சியே கம்பனை தொழுமின்' என்றும், நமை ஆளும் அவனைத் தொழுமின்’ என்றும்,"இடுகுநுண் இடை ஏந்திள மென்முலே, வடிவின் மாதர் திறம் மனம் வையன்மின்” என்றும் அருளுட தேசம் செய்துள்ளனர்.

கச்சியம்பதி காமாட்சி அம்மையாரால் வழி படப் பட்ட குறிப்பு "இச்சையால் உமை நங்கை வழிபடத் தீம்பொழில் கச்சிஏ கம்பம் என்னும் வரியால் புலனுகிறது. மேலும், "தடங்கண்ணினுள் கைதொழ" என்பதலுைம் தெரிய வருகிறது. இதில் கச்சிப்பதி கொச்சையார் குறுகார் ' என்று கூறப்பட்டுள்ளதைச் சிந்திக்கவும்.

இறைவர் இயல்புகளே இப்பதிகத்தில் அப்பன் நன்கு எடுத்து இயம்பியுள்ளனர்.

'ஊனில் ஆவி இயங்கி உலகெலாம் தான் உ லாவிய தன்மையர். '

தமை ஆ ரும் அறி ஒண்ணுத் தகைமையர்'

மருந்தி ளுேடுதல் சுற்றமும் மக்களும் பொருத்தி நின்றெனக் காயனம் புண்ணியன் கருந்த டம்கண்ணி குள் உமை கைதொழ இருந்த வன் கச்சி ஏகம்பத் தெந்தையே:

கொச்சையான் - அறிவில்லாதவர். ஊனில் - உடலில், இயங்கி நடமாடி, அறிஒண்ணு - அறியமுடியாத, தகை மையர் தன்மையர். தடங்கண்ணி விசாலாட்சி. எந்: தையே என் தந்தையே. (நம் செந்தமிழ்த் தொடராகிய தடங்கண்ணி என்பதை வடமொழியாளர் விசாலாட்சி என்று. மொழி பெயர்த்துக்கொண்டு வழங்கி வருவதைக் காண்க.)