6 பார்வதிபாய் அதவலே தங்கம் ஆனல் கால்மட்டும் சிறிது ஊனமாய் இருக்கும். என்ன சொல்கிறீர்கள் ?' என்ருர். பார்வதியின் அன்னயார் இதனைத் தம் கணவருக்குத் தெரிவித்தார். ஜோஷி முதலில் சிறிது தயங்கினர். அப்போது அவர்மனேவியார் கொண்டியோ, முடமோ, யாருக்காயினும் ஒருவருக்குப் பெண்ணேக் கொடுத்துவிடுவது நலம். இன்னும் எத்தனேநாள் இவ்விதம் வைத்துக்கொண்டிருப்பது!’ என்று ஆற்ருமையோடு கூறினர். ஆதலால், அவ்வந்தனர் எல்லாம் அவரவர் தலையெழுத்தின்படிதானே நடக்கும்' என்று சொல்லிக்கொண்டு அந்த இளைஞருக்குக் கொடுக்கச் சம்மதித்துவிட்டார். - பார்வதிஅம்மையாருக்கு அந்த இ ளே ளு ைர மணந்துகொள்ளச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆயினும் அவர், தம் எண்ணத்தைத் தெரிவிக்க இயலாதவராய் இருந்தார். அந்த அம்மையாரின் கருத்தை அறியப் பெற்ருேரும் கவலைகொள்ளவில்லை. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த இளைஞரும் ஒரு வாரம் விடுமுறை பெற்றுக்கொண்டு தேவ்ருக் என்னும் அந்தச் சிற்றுாருக்கு வந்து சேர்ந்தார். * , பார்வதிஅம்மையார் முதலில் பெரிதும் வருந்தினர். பிறகு அவரும் தம் தலேயெழுத்தில் நம்பிக்கை கொண்டவராய்த் தம் மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டார். மேள தாள முழக்கத்துடன் திருமணம் கடங்தேறியது. அந்த இளைஞர் இரண்டொரு நாள் தம் மாமர்ைவீட்டில் இருந்தார் ; பிறகு தம் உத்தியோகத் தின்பொருட்டுக் கோவாகரம் சென்றுவிட்டார்.
பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/12
Appearance