உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பார்வகிபாய் அகவலே அந்தச் சதனத்தில் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினர். அந்தச் சதனம் புகைகரத்துக்கு மாற்றப்பட்டபோது கம் அம்மையார் புளுவுக்கும் சென்று கல்வி பயின்றுவந்தார். * பெரியார் கார்வே தம் மனேவியாரை இழந்து தனித் திருந்த காலத்தில் நரஹரி ஜோஷியும் தம் மனைவியாரை இழந்தவராய் இருந்தார். ஆதலால் அவர்கள் இருவரும் ஒருவகையில் ஒத்த கருத்துடையராயே இருந்தனர். கைம்பெண்மணம், பெண்கள்முன்னேற்றம் முதலியவற்றிலும் ஒன்றுபட்ட எண்ணமுடையோராய் இருங்தனர். ஆதலால், ஜோஷி, அடிக்கடி கார்வேஊருக்குச் செல்வார். கார்வே அவ்விதமே ஜோஷியின் ஊருக்குச் செல்வார் ; அவர்தம் தந்தையாராய பாலகிருஷ்ண ஜோஷியினிடமும் உரையாடுவார். கார்வேயும் நரஹரியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது பாவகிருஷ்ண ஜோஷிக்குச் சிறிதும் பொருத்தமாகத் தோன்றவில்லே. ஆதலால் அவர் ஒருநாள் நம் பெரியாரை நோக்கி, நீர் ஏன் மறுமணம் செய்துகொள்ளாமலே இருக்கிறீர் ?’ என்று வினவிஞர். அப்போது நம் பெரியார் சிறிது தயங்கி, என் ம்னத்துக்கு ஏற்ற ஒர் இளங் கைம்பெண் கிடைத்தால் நான் விருப்பத்தோடு மணஞ் செய்துகொள்வேன். இல்லையேல், என் வாழ்நாள் இவ்விதமே கழியவேண்டியதுதான்' என்று கூறினர். == அதற்காக நீர் உமது வாழ்நாட்களே விணுக்கப் போகிறீரா? " என்ருர் பாலகிருஷ்ண ஜோஷி.